30
இந்திர மோஹனா
உன்தனக் கரசர் ஈரொன் பதாண்டாய் சண் டனுக்கிடவோ பெற்றவர் களையும்
மைந்தனே ! விட்டு
அப்பனே ! என்தன் எப்பொழுது காண்பேன்
உபநயனஞ் செய்து இன்பமுடன் வளர்த்து சண்டாளி பிறந்தேன்
பற்றியே யெரிய
மாண்டாயோ மண்ணில்
அரவிந்தா வுன்னை
என் குட்சி எரியுதே.
ஐயோ! பாலா! உன்னை நான் பத்து மாதம் என் குக்ஷி யில்வைத்துப் பட்டகஷ்டத்திற்காகவாவது நீ என்னை அம்மா என்று கூவிய வண்ணம் ஒடிவாராயோ. என் கண்ணே ! நீ பத்துமாதம்குடியிருந்தவீட்டில் அவியாததீயை மூட்டிவிட்டுச் செல்வது தகுமோ ! இது முறையோ! என்னப்பா ! இது தருமந்தானா ? ஐயோ! உன் தந்தையும் ஊரைவிட்டுச் சென்று பத்துநாளாகியும் இன்னும் வரவில்லை. ஒரு செய்தியும் தெரிய வில்லை. உலகில் பெண்களுக்குக் கலியாணமாகும் வரையும் தாய் தந்தையர் கீழ்படிந்தும், பிறகு கணவனுடைய ஸ்வா தீனத்திலும், அதன் பிறகு புத்திரனுடைய ஆதீனத்திலு மிருக்கும்படி மநு தர்ம சாஸ்திரம் கூறுகின்றது. அப்படிக் கிருக்க இவ்விள வயதில் என்னைக் காப்பாற்றாமல் செல்வது உனக்கழகோ? ஐயோ ! என்னுயிர் அனலில் இட்ட மெழு கைப்போல் துடிக்கிறது. உன் தந்தைவந்தால் இச்செய்தியைப் பாவியாகிய யான் எப்படித்தெரிவிப்பேன்? மைந்தா! நீ
குழந்தையில் பேசிய ஒவ்வொரு மழலைச்சொல்லை நினைக்கும் போது என்மனம் புண்படுகிறது. அப்பா! உன் உயிர் போகும் 'போது எப்படித் துடித்தாயோ?