பக்கம்:இந்திர மோகனா.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

இந்திர மோஹனா

எவ்வாறு பொறுப்பேனடா! என் புத்திரசிகாமணியே ! அரவிந்தா ! ஹா! ஹா!! என் கண்ணே! (மூர்ச்சித்து விழுதல்.)

நீலா விமலா (இருவரும்) ஐயோ இது என்ன கஷ்டம் ! இந்த அம்மைக்கு இவ்விதத் துயரம் நேரலாமோ. நமக்கே இதைக்கேட்டது தீயிற் குதித்தது போலிருக்கிறது. பெற்ற தாய்க்கு எப்படி யிருக்குமோ! பாவம். ஹா ! தெய்வத்திற்கு ஏன் கண்ணில்லாமற் போய்விட்டது!

நீலா: ஐயோ! அம்மாவுக்குக்களை அதிகரித்துப் போய். விட்டதுபோலிருக்கிறது; கொஞ்சம் பாலும் ஜலமும் கொண்டு வா,விமலா. (விமலா கொண்டுவர ஜலத்தை தேவகியின் முகத்திலடித்துப் பாலை வாயில் வார்க்கிறார்கள்.)

நீலா:-ஐயோ ! இதென்ன அநியாயம்! பால் இறங்க. வில்லை ! வழிந்து போகிறது! முகத்தில் ஜலம் தெளித்தாலும் கண் திறக்கவில்லை ! என்ன கஷ்டம் ! அம்மணி ! அம்மணி ஐயோ! கூப்பிட்டாலும் எழுந்திருக்க வில்லையே! ஹா! என்ன அவஸ்தை? இந்த அம்மாவைப் பார்க்கக்கூடச் சகிக்க வில்லை. (இருவரும் தூக்கி சோபாவில் படுக்கவைக்கிறார் கள்.)

விமலா:-ஐயோ ! நாங்கள் தூக்கிவிட்டது கூடத்தெரி என்ன செய்வது? பயமாயிருக்கிறது.

யவில்லை.

ஜய :-பயப்படாதேயுங்கள். புத்திர சோக மென்றால் லேசானதா? பாவம்! என்ன கஷ்டம்? தசரதர் ஸ்ரீராமர் கானகம் சென்றாரென்று கேட்டதற்கே மூர்ச்சையாய் உடனே இறந்து விட்டார். அப்படியிருக்க மைந்தன் இறந்து விட்ட தாகக் கேட்டால், உயிர் எப்படித் தரிக்கும் ? நிதானி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/49&oldid=1559515" இலிருந்து மீள்விக்கப்பட்டது