பக்கம்:இந்திர மோகனா.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

இந்திர மோஹனா

நிகில நிலயா ! நிர்மல ஹ்ருதயா! பங்கஜ நயன ! பத்மினி ரமணா !

சரணம்.

சிற்றன்னை மொழியால் சிந்தை மிகநொந்து கலங்கிய யென்தன் கலிதன்னைத் தீர்ப்பாய் உரகசயனா! உம்மை நம்பி நின்றேன்

என்னை யாதரிப்பீர் ஐயனே ! இவ்வேளை.

(en)

(on)

ஆஆ ! நேற்றிரவெல்லாம் ஓர் யுகம்போலல்லவோயிருந் தது. இன்னும் இவ்விதம் எத்தனை நாள்தான் ஹிம்சைப்பட வேணுமோ? தெரியவில்லை. சாகரீகா, நேற்றைக்கே என் தந்தையும் சிற்றன்னையும் என்னைக் கண்டு பேசப்போவதாய்ச் சொன்னாளே என் இன்னும் அவர்கள் வரவில்லை ? விதூஷ கன் சொன்னதுபோல் முகூர்த்தம் வைத்தாய்விட்டதுபோல் காண்கிறது. திடீரென்று உதயமானதும் ஆகாததுமாயி ருக்கும் போது என் சிற்றன்னை எனக்கு நகைகளையெல்லாம் தன் தாதியிடம் கொடுத்தனுப்பினதன் காரணம் என்னோ ? ஒருகால் அவள் அண்ணன் வீட்டார் இன்றைக்கு வருகிறார் களோ என்னமோ? இல்லாவிடில் ஒரு நாளு மில்லாமல் திருநாளைப்போல இன்றைக்கு எனக்கு நகைகள் கொடுப்பா னேன்? சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்றாப்போல் இவள் ஏதோ காரணத்தால்தான் இவ்வாறு செய்திருக்கவேண்டும். இந்த நகைகளெல்லாம் எனக்கு எதற்கு? என் மனத்தில் நினைத்த மணவாள னுக்கு நான் மணமாலை சூட்டாமல் இவ் வாபரணங்களைத் தரிப்பேனா ? ஆ ஆ ! நான் எத்தனைதரம் மறக்க முயன்றாலும் என் முன்னத்தைக் கவர்ந்த மன்னன் என் முகக்கண்ணைவிட்டு மறைந்திருக்கிறாரே யொழிய, என் அகக்கண்ணைவிட்டு ஒரு வினாடியும் அகலவில்லை. என்ன ஆச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/51&oldid=1559517" இலிருந்து மீள்விக்கப்பட்டது