இந்திர மோஹனா
35
சரியம் இது! என்ன! நம் தோழி சாகரீகா இன்னும் வர
வில்லை?
(சாகரீகா பிரவேசித்தல்.)
சாக:-
கங்காதரனாம் என்றமெட்டு.)
பல்லவி.
வந்தேனம்மா இதோ தந்தேனம்மா குரல்
வந்து விட்டேனம்மா
அநுபல்லவி.
தாமதமாகவே வந்ததற் கென்னை மன்னித் தருள வேணும்
சரணம்.
இத்தனை நேரம் சிற்றன்னை யென்னை
மெத்தவும் சினந்துகொண்டார்
அத்தனையும் நான் நெட்டிக்கொண்டு
(வ)
(வ)
தங்க ளண்டையில் வந்துவிட்டேன்
(வ)
மோஹனா:- சகி! என்ன இது? நீ சொல்வது ஒன் றும் விளங்கவில்லை. சிற்றன்னை உன்னை எதற்குக் கோபிப் பது? நீயும் என்னைப்போல் சக்களத்தி மகளா என்ன?
சாக.- அம்மணீ ! அதொன்றுமில்லை. உங்களுக்காக நான் சற்றுப் பரிந்துபேசினேன். அதற்கு என்னை அரசி யம்மா திட்டினார்கள். எனக்கொன்றும் அதனால் வருத்த மில்லை. உங்களுக்கு நேர்ந்திருக்கும் கஷ்டந்தான் என் மனத் தைப் பாதிக்கிறது. ஆ!இது என்ன ! என்றைக்கு மில்லாமல் இன்றைக்குத் தட்டு நிறைய நகைகள் வைத்திருக்கிறது?