பக்கம்:இந்திர மோகனா.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

இந்திர மோஹனா

மோஹ:- அதுதான் எனக்கும் தெரியவில்லை. இன்று காலையில் நான் எழுந்தவுடன் தட்டோடு, அம்மா கொடுக்கச் சொன்னதாய்,தரங்கவதி வைத்துவிட்டுப்போனாள்.

சாகரீகா! ஏதோ காலோசை கேட்கிறது. யார் வருகி

றது, பார்.

சாக:- (திரும்பிப்பார்த்து) அம்மா! தங்கள் தந்தையும் சிற்றன்னையும் வருகிறார்கள்.

(குணசேனனும் சித்ராங்கியும் பிரவேசித்தல்.) மோஹ:-(அதிவிரை வாயெழுந்து) வாருங்கள், அப்பா ! வந்தனம், சிற்றி ! நமஸ்காரம் (ஆசனத்தைக்காட்டி) இதில் அமருங்கள். (இருவரும் உட்காருகிறார்கள்.)

குணசேனன்:- கண்ணே மோஹனா ! இப்படி என் பக்

கலில் உட்கார்.

மோஹ:- அப்பா! இதோ உட்கார்ந்தேன். (அமருதல்). ஏது தாங்கள் இங்கு வந்தது! என்னையழைத்தால் வந்திருப் பேனே. தங்களுக்கேன் இந்த சிரமம் ?

குண:-அதெல்லாம் ஒன்றுமில்லை. உன்னிடம் ஒரு முக்யமான சமாசாரத்தைப்பற்றிக் கேட்கவேண்டுமென்று வந்தேன். அதற்குச் சரியான விடை சொல்லவேண்டும்.

சித்ராங்கி:- கேளுங்கள். இந்த உபசாரவார்த்தையெல் லாம் எதற்கு?

கள்.

மோஹ:- அப்பா ! அப்படியே சொல்கிறேன் கேளுங்

குண - பெண்ணே ! உன்னைச் சாளுவதேசத்தரசன்

மகன் சாணக்கியனுக்கு மணம் புரிவிக்க ஏற்பாடு செய்திருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/53&oldid=1559520" இலிருந்து மீள்விக்கப்பட்டது