இந்திர மோஹனா
37
கிறோம். நாளை வெள்ளியன்று முஹூர்த்தம்.நீ முன்போல் மறுக்கலாகாது. அஷ்டலக்ஷணங்களும் பொருந்திய அவ னுக்கு என்ன குறைவு? அவனே உனக்குத் தகுந்த மணா
ளன்.
சித்ரா:-நன்றாயிருக்கிறது.
என் மருமகன் சாணக்கி
யனை மணக்கக் கசக்கிறதோ ! பாவம்: எத்தனையோ மஹா ராஜாக்கள் போட்டிமேலே போட்டிபோட்டு தங்கள் பெண் ணைக் கொடுக்கிறேனென்கிறார்கள். என்னவோ என் வயிற் றில்தான் பிறந்து அவனுக்குக் கொடுக்க நான் பாக்கியம் செய் யவில்லை. உங்களுக்குப் பிறந்ததையாவது கொடுத்துக் கண் குளிரப் பார்க்கலா மென்று நான் பாடு படுகிறேன்.
மோஹ:- அப்பா! நான் பன்முறை சொல்லியும் தாங் களே என்னைச் சோதிக்கின்றீர்கள். விவாகமென்னும் எண் ணமே என் மனத்தில் உதிக்கவில்லை. ஆகையால் விவாகம் இப்போது எதற்கு? தம்பதிகள் மனமுவந்து மணப்பதல் லவோ மணம். ஆகையினால் இந்த விவாகத்தை தயவு செய்து நிறுத்தல்வேண்டும்.
குண;- பேதாய்!
என்ன சொன்னாய்? (கோபத்து
டன்) வெகு நன்றாயிருக்கிறது. ஜாக்கிரதை. இன்னொரு தரம் அம்மாதிரி சொல், பார்ப்போம்.
யாதையில்லாமல் என்ன சொல்கிறாய்?
கொஞ்சமேனும் மரி
சித்ரா:-வேணும், வேணும் உங்களுக்கு. கேவலம் ஒரு பெண்பிள்ளைக்கு அதிலும் தாயற்ற சிறுக்கிக்கு இவ் வளவு செல்லம் கொடுத்தால் அப்படித்தான் தலைக்குமேலேறு வாள்.இன்றைக்கு விவாகம் வேண்டாமென்பாள். நாளைக்கு