38
இந்திர மோஹனா
நம்மையே நாட்டைவிட்டு ஒட்டிவிடுவாள். பெட்டைக்கு இவ் வளவு அதிகாரமா? வெகு அழகு.
குண:- பெண்ணே ! மோஹனா! உனக்கு விவாக காலம் ஆயிற்றா இல்லையா என்பது என்னைவிட உனக்கு அதி கமாய்த் தெரியுமா? 16 வயதான பெண்ணை மணஞ்செய் யாமல் வைத்திருப்பது எனக்கு அடுக்குமா? உன் சொல்லை நான் கேட்கமாட்டேன். செய்து தான் தீருவேன்.
மோஹ :- ஐயனே! தாங்கள் என்னை என்ன செய்தா லும் சம்மதம். இப்போது விவாகம் மாத்திரம் வேண்டாம். (காலைப் பிடித்துக்கொண்டு), தயவு செய்வீரென்று நம்புகி றேன்.
(ஆறுமுகவடி வேலவனே யென்றமெட்டு)
முன்னம் ஒவ்வாத கடிமணஞ் செய்வது
ஐயனே உமக்கழகோ - இந்த
சின்னஞ் சிறுமியின் சிந்தை நோவாமலே
காத்தருள வேணும்.
உம்மையல்லால் வேறு திக்கெனக்கு முண்டோ என்னருந் தந்தையரே-நீர் செம்மையுடனே நான் செப்பு மொழி கேட்டு நிறுத்துவீர் என் ஐயனே!
குண:- (கோபத்தோடு காலை உதறிக்கொண்டு) பிலஹரி ராகம். சாபு தாளம்.
தக்கவரன்றனைத் தான் போக்கிக் கொள்கிறாய் பெண்ணே மோகனாங்கியே!