இந்திர மோஹனா
அக்ரம மாகவே உன் சொல்லைக் கேட்டு நான் மணத்தை நிறுத்துவேனோ.
மோஹனா:- அடியாள் மீதினில் இரக்கங் கொண்டிதை நிறுத்தி விடுவீர் தந்தையே!
முடவன் சாணக்கியனைக் கடிமணஞ் செய்வது தப்பித மன்றோ அப்பா!
சித்ராங்கி:- போதும் போதும் உன்தன் நீதியை யொருபுறம் கட்டிவையடி பேதையே! யாருக்கு இந்த மதியோது கின்றாயடி நீதங் கெட்ட சிறுமியே!
39
பேஷ், நிரம்ப நன்றாயிருக்கிறது. நேற்றுப் பிறந்த நத்தைக் குட்டிக்குச் சமானம் நீ. இவ்வளவு பெரிய அரச னுக்கு புத்திமதி கூறவந்து விட்டாயோ ! சீ, பேசாமலிரு.
மோஹ:- (கண்ணீர் பெருக) நீங்கள் சொல்வது போலவே நேற்றுப் பிறந்த நத்தைக் குட்டிக்கு விவாகம் இப் போது வேண்டா மென்று மன்றாடுகிறேனே யொழிய
வேறொன்று மில்லை.
குண:- பெண்ணே ! வீண் பேச்சு பேசிக் காலத்தைப் போக்க வேண்டா; நான் சொன்னால் சொன்னது தான். இத் தனை நாள் தாமதமானதைப்போல் இனி முடியாது. அதிக மாய்ப் பேசினால் எனக்குக் கோபம் வரும்.
மோஹ :
(ஸ்ரீராம பாதமா. மெட்டு)
ராகம் :- அம்ருதவாஹினி ; தாளம் : ஆதி.