பக்கம்:இந்திர மோகனா.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

இந்திர மோஹனா

பல்லவி.

தந்தையே பேதையான் என் செய்வேன் நீவீர்

சித்தம் இரங்கியே காவும்.

அநுபல்லவி.

சந்திரபுரியின் சக்ரவர்த்தியே

(த)

இந்தக்கடி மணந்தன்னைத் தடை செய்தல் வேண்டும். (த)

சரணம்.

மாநிலந்தன்னில் மங்கையாய்ப் பிறந்து

மாதாவை யிழந்து மதிகலங்கியே நிற்கும்

புதல்வியைக் கண்டு பரிதாபங் கொண்டு

நிறுத்தி விடுவீரென்று நம்புகிறே னப்பா.

(த)

அப்பா! என் பொருட்டு இந்தத் தடவை நிறுத்தல் வேண்டும் தங்களைத் தவிர எனக்கு வேறு கதியார் !

குண:-பேதாய்! உன் பொருட்டு உன் சிற்றன்னை எவ்வளவோ சிரமம் எடுத்துக்கொண்டு இந்த விவாகத்தை விரைவில் முடிக்கவேண்டு மென்று ஆவலாயிருப்பதை நான் தடுப்பேனா? அவள் தன்வயிற்றிற் பிறந்த பெண்மாதிரியாக உன்னை அன்போடு வளர்க்க, அவள் சொல்லைத் தடுப்பது நியாயமாகுமா? நீ சிறுமி. உன் இஷ்டப்படி விடுவேனென்று நினையாதே.

சித்ரா:- போதும். நீங்கள் மருட்டுகிற அழகு. சிறு பிராயத்திலிருந்து தலைமேல் வைத்துக் கூத்தாடிவிட்டு இ போது மருட்டினால் கேட்கமாட்டாளோ? நம்மிடத்தில் பய மிருந்தால் இப்படி யிருப்பாளா ? காலை நான் கொடுத் தனுப் பிய நகைகளை இவள் போட்டுக் கொண்டாளா, பாருங்கள், இந்தத் தீசநாரி எங்கே தட்டுடன் தள்ளி வைத்திருக்கிறாள், நீங்களே பாருங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/57&oldid=1559524" இலிருந்து மீள்விக்கப்பட்டது