பக்கம்:இந்திர மோகனா.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

41

குண:- (கோபத்தோடு) அடி மோகனா! என்ன காரி யம் செய்தாய்? உதயததுக்குக் கொடுத் தனுப்பிய நகைகளை ஏன் இவ்வளவு அலட்சியமாய்த் தள்ளி வைத்திருக்கிறாய்? உம். உன் இஷ்டம் போலாடுகிறாயா? இருக்கட்டும். என்ன செய்கிறேன்,பார்.

மோஹ:- அப்பா! என்மேல் தாங்களே கோபித்துக் கொண்டால் நான் என் செய்வேன்? அதிகாலையில் நகைகள் எதற்கு? ஸ்நானஞ் செய்துவிட்டு அணிந்து கொள்ளலாமே யென்று வைத்திருக்கிறேன். நான் என்ன அலக்ஷ்யமாய் வேண்டாமென்று சொல்லவில்லையே. பிறகு போட்டுக் கொள் கிறேன்.

என்

சித்ரா:-இன்னும் வேண்டாமென்று சொல்லி முகத்தில் போட்டுவிடு; பார்ப்போம். விவாகந்தான் வேண்டா மென்று மறுத்துவிட்டு எவனைக் கட்டிக்கொள்ள எண்ணம் வைத்திருக்கிறாயோ? தாய் தந்தையர்கள் தேடிச்செய்கிற விவாகம் மிகவும் கடினம்தான். தானே தேடிச்செய்து கொள் வது வெகு அழகு. (குணசேனனைப் பார்த்து) வாருங்கள், நாம் போவோம். இவளைக் கேட்பதென்ன? கேட்டால் தானே தலைமேல் ஏறுகிறாள்.

குண:- அடீபெண்ணே! நீ ஆட்டி வைக்கிறபடி நான் ஆடுவேனென்று நினைக்காதே. முஹுர்த்தம் வைத்து மண வோலை கூட அனுப்பியாய்விட்டது. இனிமேல் உன்ஜபம் சாயாது; ஜாக்கிரதை. இனி வாயைத் திறவாதே. நான் போகிறேன். (புறப்படல்)

மோஹ:-(விரைவிலெழுந்து தந்தைகாலைப் பிடித்துக்

கொண்டு),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/58&oldid=1559525" இலிருந்து மீள்விக்கப்பட்டது