42
இந்திர மோஹனா
(மாத்தாட பாரதேனோ மெட்டு.)
கமாஸ் ராகம். சாபுதாளம்.
பல்லளி.
காக்கவேணும் தந்தையே! காரிகை யென்னை
(கா)
அநுபல்லவி.
(கா)
பார்க்காவிட்டால் இனி யாது கதி யெனக்கு
சரணம்,
என்தன் அன்னை யிருந்தால் அடுக்குமோ விந்தமணம் துடுக்காகச் செய்வது ராஜநீதிக்கழகோ?
(கா)
சித்ரா:-சீ, சீ, நாயே! நீயா உன் தந்தைக்குப் புத்தி புகல்வது? வாயை மூடடீ வெட்கங் கெட்டவளே!
மோஹ:
சரணம்.
மாற்றாந்தாய் மாற்றங்கேட்டுக் கடிமணம் செய்வதாலே கெடுதிகள் சம்பவிக்கும் என்றதை யுணர்ந்து நீர். (கா)
சித்ரா:- அடீ துஷ்டே ! என்னையா பழிக்கிறாய். உன்னை வைக்க வேண்டிய திட்டத்தில் வைத்தால் உன் கொழுப்பு அடங்கும். நாயைக்கழுவி நடுவுள்ளே வைத்தால் அது சும்மா இருக்குமா? இந்த அசட்டாளத்தைக் கேட்டால் அப்படித் தான் உளறும்.
குண :-(காலை உதறிக்கொண்டு) எண்டி மோஸனா என்ன சொன்னாய் நீ? உன் சிற்றன்னையின் சொல்லால் நான் உனக்குக் கெடுதிகள் செய்கிறேனா? நல்லது. உன்னை அவள் இவ்வளவு செல்லம் கொடுத்து வளர்த்ததின் பயன் இது