பக்கம்:இந்திர மோகனா.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



8 ஒரு விண்ணப்பம். 307 66 தற்காலத்தில் தமிழுலகில் உலாவிவரும் சில நாடகங்களைக் கண்ணுற்றபோது ஒரு கற்பனைக்கதையை நாடகரூபமாகப் பாட்டுக்களுடன் எழுத வேண்டுமென்ற அவா எனக்குண் டாயது ஆசை வெட்க மறியாது" என்கிறபடி ஆசை என்னைத் தூண்டிற்றேயல்லாமல் நாடக லக்ஷணங்களைக் கசடறக்கற்று எழுதவில்லை. எட்டு மிரண்டுமறியாப் பேதை எழுதியிருப்பதில் அளவற்ற பிழைகளிருக்கு மென்பதில் சற் றேனும் ஐயமில்லை. தமிழ்ப் பண்டிதர்கள் இயற்றியுள்ள நாட கங்களைப்படித்தவர்க்கு இது ஒரு பொருட்டாய்த்தோன்றாது, புலிமுன் பூனை தன் சாமர்த்தியத்தைக் காட்டுவது போலவும், கரிமுன் நரி நிற்பது போலவுமிருக்கும். ஆயினும், பெற்றோர் தம் குழந்தையானது பலகையின் மேல் கோணலாகக் கிறுக் கினது ஓர் எழுத்துப்போல் தோன்றினால் அதை " ஆ! நம் குழந்தை எழுதுகிறானே " என்று சந்தோஷிப்பது போல நான் எத்தனை பிழைகளுடன் எழுதியிருந்தாலும், கரும்பின் ரசத்தை யுட்கொண்டு திப்பியை விலக்குவதுபோலவும், அன்னமானது பாலில் கலந்துள்ள நீரை விலக்கிவிட்டுப் பாலை மாத்திரம் பருகுவது போலவும், அப்பிழைகளை நீக்கிவிட்டுச் சிறு பான்மை நல்லதை எடுத்துக்கொண்டு, குழந்தைகட்கு மேன்மேலும் வித்தை கற்றுக்கொடுப்பதுபோல் இதிலுள்ள பிழைகளை எனக்கு எடுத்துரைத்து அடுத்த பதிப்பில் சரியா யெழுதுவதற் கனுகூலமாகும்படி செய்யவேண்டு கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/6&oldid=1559469" இலிருந்து மீள்விக்கப்பட்டது