இந்திரமோஹனா
43
தானோ! அடி துஷ்டநாயே! இன்னொருதரம் இப்படிச் சொன்னால் என்ன பாடுபடுவாய் தெரியுமா?
மோஹ:- அப்பா! "தாயற்ற அன்றைக்கே தம்மக்கள் சீர் அற்றார்" என்றபடி என் தாய் என்றைக்கு மாண்டாளோ அன்றைக்கே நான் நாயாயும் கழுதையாயும் துஷ்டையாயும் போய்விட்டேன். இவ்வித நாயை ஓர் அரசகுமாரனுக்குக் கொடுப்பதென்றால் அது தகுமோ ? அதற்குத் தான் நான் விவாகம் வேண்டாமென்று சொல்வது. என்மேல் கோபங் கொள்ள வேண்டாம். அப்பா! சிற்றன்னை சொல்வது நீதியோ?
சரணம்.
நாயென்றும் பயென்றும்
நாணம் கெட்டவளென்றும்
ஏசியென்தனை மிகப்பேசுவது முறையோ
என்னருந் தந்தையே சின்னஞ்சிறுமியானும்
(கா)
சொன்ன மொழிகளை அங்கீகாரஞ் செய்து (கா)
அப்பா! நான் ஏதாவது தப்பிதமாய்ச் சொல்லியிருந்தாலும் "சிறியோர் செய்த சிறுபிழையெல்லாம் பெரியோராயிற் பொறுப்பது கடனே" என்றபடி என்னை மன்னித்து, இவ் விவாகத்தை நிறுத்திவிடும் - சிற்றன்னையின் சொல் சர்க்க ரையாயிருந்தாலும், புதல்வியின் புதல்வியின் சொல் பிரண்டையைப் போல் காறலாயிருந்தாலும் அதையும் சில காரியங்களுக்கு. உபயோகப்படுத்துகிறதைப்போல என் சொல்லை எல்லாவற் றிற்கும் தள்ளிவிட்டாலும் இவ்வொன்றிற்குமாத்திரம் கேட்க வேணுமென்று பிரார்த்திக்கிறேன்.
சித்ரா:- என்னடி நீ கெட்டகேடு ?