பக்கம்:இந்திர மோகனா.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

45

மல் உதாசீனமாய்ப் பேசுகிறாயா? ஹும். இருக்கட்டும். சித்ரா! வா, போகலாம். மனவருத்த மடையாதே. இக்கழுதை யின் பேச்சை ஒரு பொருட்டாக வைக்காதே; எழுந்திரு. (இருவரும் புறப்படல்).

மோஹ:- (வழிமறித்து) ஐயனே ! யான் சொல்வதை மறந்து விடாதேயுங்கள்.

குண:- சீ! வழி மறிக்காதே. இனி உன் சொல் ஏறு மென்று கனவிலும் கருதாதே. வெள்ளிக்கிழமை முஹுர்த் தம் நடந்தே தீரவேண்டும். (அவளை விலக்கிக்கொண்டு நிஷ்க்ர மித்தல்.)

மோ:- ஐயையோ தேவா! இதுவும் உன் சோதனையோ? (மூர்ச்சித்து விழுதல்.)

சாக:- (களை தெளியவைத்து) அம்மணி ! எழுந்திருங் கள். எதற்கு வீசனப்படுவது? எல்லாம் வீணாய் விட்டது. இனி மேல் ஆவதைப்பற்றி ஆலோசிக்க வேண்டுமே தவிர துக்கப்படுவதிற் பயனில்லை.

மோஹ:- ஐயோ ! சாகரீகா ! நான் எதற்கென்று விச னப்படுவது. அக்கிழ மன்னனுக்கு மனைவி சொல்தான் பிர தானமாய்விட்டது. பெற்றபெண்ணென்ற எண்ணம் கொஞ் சங்கூட இல்லையே. ஆ! எல்லாம் நான் செய்த பாவம்தான்! சகி! இனி என் செய்வது? ஒரு வழிதானிருக்கிறது; ஜகதீசா! இப்பேதைக்கு இவ்விதத்துயரம் எதற்கு? கண் திறந்து பார்க்கலாகாதா?

சாக:அம்மா ! ஏன் வருந்துகிறீர்? ஆழவமுக்கிமுகக்கினும், ஆழ்கடலில் நாழிமுகவாது நானாழி _ தோழீ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/62&oldid=1559529" இலிருந்து மீள்விக்கப்பட்டது