46
இந்திர மோஹனா
நிதியுங்கணவனும் நேர்படினுந்தந்தம் விதியின் பயனேபயன்.
என்று சொல்லி யிருப்பது நம்போன்ற மகளிர்களுக்கன்றோ ? நீங்கள் மனத்தில் நிச்சயித்திருக்கும் மஹாபுருஷனை மணக்க ப்ராப்தமிருந்தால் ஒரு கணமும் நில்லாது. இந்தவிவாகம் ஒரு நாளும் நடவாது. விசனப்பட்டு ஆவதென்ன? நாழிகை யாய்விட்டது. ஸ்நானம் செய்யப்போகலாம், வாருங்கள்.
மோஹ:- எனக்கு நினைக்க நினைக்க ஆறவில்லை. என்னவிந்தை ? என் தந்தை கடைசியிற் சொன்ன சொல் என் மனத்தைப் பிளக்கிறது. ஆ! என்ன கொடுமை!
முத்திநெறியறியாத என்ற மெட்டு.)
அண்ணனென்றும் தம்பியென்றும் அருந்தவப் புதல்வரென்றும் அன்னையென்றும் ஐயனென்றும்
இகுளையர்களென்று மெண்ணார் கன்னியர்கள் மோகமென்னும் கடுவலையிற் கிடந்தலைந்தோர் முன்னம்தளராத் தீச்செயல்கள்
முனைந்துசெய்வார் நிலந்தன்னிலே.
ஐயோ! என்ன வயதாகியும் சிறியவர்களைப்போல் மனைவி யின் மோகத்திலீடுபட்டு மதிமயங்கிப் பெற்ற பெண்ணையும் மறந்து எவ்வளவு உதாசீனமாய்ப் பேசினார் ? ஆ! ஆ! அந் தச்சித்திராங்கி பேசினபேச்சு என் மனத்தை விட்டகல வில்லை. "உன் தந்தையுடைச் செல்லம் போச்சு
என்று