பக்கம்:இந்திர மோகனா.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

47

I

அவள் சொன்னபடி அவள் முன்னேதானே என் பிதா என் னைத் தன் வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினார். ஆ! இளையாள்மேல் என்ன மோஹம் ? உம். யார் விதியை யார் அறிவார்கள்? எல்லாம் ஈசன் செயல்.

ஆவது விதியெனின் அனைத்துமாய்விடும் போவது விதியெனின் எவையும் போகுமால் தேவருக் காயினுந் தீர்க்கத் தக்கதோ

ஏவரு மறியொணா ஈசற்கல்லதே.

என்றதுபோல் என் தலைவிதி யாருக்குத் தெரியும்? நான் மனத்தில் நினைத்திருப்பது ஈசன் திருவுள்ளத்துக்கு உகந்ததா யிருந்தால் என் மனோபீஷ்டம் நிறைவேறும்.

சாக :- அம்மணி ! உங்கள் மனோபீஷ்டம் எப்படியும் ஈசனருளால் நிறைவேறும். அதைரியப்படாதீர்கள்.

மோஹ:- சாகரீகா! என் மனத்தை ஒரே தீரம் செய்துகொண்டேன். என் மனத்தில் நாயகனாய்க் கொண்ட மணவாளனை யல்லாமல் வேறு யாரையும் கண்ணெடுத்தும் பாரேன். இது சத்தியம். இதனால் என்ன கெடுதி வந்தா லும் சரி. அப்படி நான் கொண்ட விரதம் பலியாவிட்டால் என் உயிரை விடுவது திண்ணம்.

(சுஜன ஜீவனா என்ற மெட்டு)

கமாஸ் ராகம்; ரூபகதாளம்.

பல்லவி.

பணிந்து ஈசனை நான் உற்ற புருஷனை சகி! (ப)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/64&oldid=1559531" இலிருந்து மீள்விக்கப்பட்டது