48
இந்திர மோஹனா
அநுபல்லவி.
மணவாவிடில் நான் மோஹனாவன்று
சிற்றன்னைக் கெதிர் மன்னனை நான் மாலையிடுவேன். சகி!(ப)
சரணம்.
பத்மநேத்ரன் பாதமலரைப் பணிவது நான் சத்தியம் பக்ஷபா தமுள்ள என்தன் தந்தையின் முன்னிலையில் சந்திரபுரியின் இளவரசி யென்றென்னை
ஜகத்தோர்க ளறியும்படி நான் மாலை சூடுவேன் சகி!
(ப)
சகி ! இன்று உன்னிடம் நான் செய்த பிரதிக்கினையை நிறைவேற்றாமல் போனால் என் பெயர் மோஹனா வல்ல. அவ்விருவரும் கறுவிச் சென்றதுபோல, நானும் என் மன த்தில் உறுதி வைத்துக்கொண்டேன். வைத்துக்கொண்டேன். யார் ஜபம் பலிக் கிறதோ, பார்ப்போம். எல்லாம் என்னையாளும் ஈசன் செயல். ஸ்நானஞ் செய்யப்போவோம். (இருவரும் நிஷ்க்ரமித்
வா.
தல்).
முதற் களம் முற்றிற்று
(இரண்டாவது அங்கம். இரண்டாங்களம்.)
இடம்: சந்திரபுரியைச்சார்ந்த வனம்.
காலம்:- இரவு.
(ஜீவனன் என்னும் பரதேசி பிரவேசம்.)
ஜீவனன்- (காயமே இது பொய்யடா என்ற மெட்டு)
அபயம் அபயம் தந்து நீ
ஆதரிப்பாய் எந்தனை
இந்த ராத்திரி வேளையிலே
ஈசனே ஜகதீசனே !