வில்லையே.
இந்திர மோஹனா
உன்றனுடைய பாதம் போற்றி ஊரைவிட்டுப் போகிறேன் என்தனுக்கருள் புரிவாய் ஏ கருடவாகனா ! ஐயமிட்டுண்பது போய் ஒண்டியாகிச் செல்கிறேன் ஒலமிட் டலறுமென்னைக் காத்தருள்வாய் கண்ணனே. நாடுவிட்டு நகரம்விட்டுக் காட்டில் புகுதலானேனே. பதியைவிட்டு நிதியைவிட்டுப் பெற்றவரையும் விட்டுநான் பரதேசியாய்க் கொடியவனங் தன்னில் தியங்கவைத்தாயோ !
49
ஹா! ஜகதீசா! நான் இப்படி நாடிழந்து, நகரிழந்து, கானகம் புகுந்து, பனியால் நனைந்து, வெயிலாலுலர்ந்து, தனியாய்க் கிடந்து, மெய்சோர்ந்து மெலிந்துபோதல் நின்கருணைக்கழ கோ? ஆ! காலை முதல் இதுவரையில் இக்கொடிய கானகத் தில் அலைந்து, திரிந்து என் கால்கள் ஓய்ந்தனவே யொழிய ஒரு மனுஷ்யனையும் இப்பயங்கரமான வனத்தில் காண இரவோ அதிவேகமாய்க் கொடியவர் இருதயம் போல வந்துவிட்டது. ஐயோ! எனக்கு மிகவும் பயமாயிருக் கிறது. (நாற்புறமும் சுற்றிப்பார்த்து),பசிதாகம் மேலிடுகிறது. இந்தக் காட்டில் என்ன கிடைக்கப் போகிறது? எங்குப் பார்த்தாலும் ஓர் துளி தண்ணீர் கூடக் கிடைக்கவில்லை. புசிக் கக் கூடிய வஸ்துவொன்றும் கண்ணிற்கெட்டிய வரையிற் காணவில்லை. ஐயோ! நான் இவ்விதம் பசியால் ஒருநாளும் வருந்தியது கிடையாது. இன்றைக்கு நான் இதை எப்படித்
4