பக்கம்:இந்திர மோகனா.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

இந்திர மோஹனா

தணிப்பது? ஐயோ! நான் என் செய்வேன் ? என் தாய் என்ன கதியானாளோ! ஆ! என்ன கோர சம்பவம் நடந்தது! நினைத்தால் என் மனம் நடுங்குகிறது. அடே துரோகி ! யான் உனக்கு என்ன தீங்கு செய்தேனடா. ஏ கொலைப் பாதகா! உன்னாசையின் மோசமே மோசம். ஐயோ ! கால் கள் தள்ளாடுகின்றன; கண்கள் சோர்கின்றனவே. ஜக தீசா ! யான் இவ்விதம் திரிந்து துன்பப்படவோ பிறந்தேன். நான் மூன்று நாளாய் அலைந்தும் ஒரு சிறிய கிராமமாவது கண்ணுக்குத் தென்படவில்லை. இப்படி யிருக்கும்போது இந்நிர்மானுஷமான வனத்தினின்று தப்புவித்து எப்பொ ழுது என் தாயிடம் சேர்ப்பாய்? பரமதயாநிதே! உன்னைத் தவிர எனக்கு வேறுகதியில்லை. நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும். இப்போதிருக்கும் பசி பிராணன் போய்விடும் போலிருக்கிறது.

(ராதாகிருஷ்ணனை யென்ற மெட்டு.)

ராகம் - தன்யாசி.

தாளம் - ஆதி.

படமுடியாதென்றன் பசியைத் தீர்ப்பாயோ

பரம தயாநிதியே !

(ப)

தரையில் தவிக்கும் உன்தன் தநயனைக் கண்டு

திரும்பிப் பார்த்தருள்வாயோ தயாநிதே!

(ப)

அடவிதன்னிலே அநாதனைப்போல்

அலையுமென் தனை

இன்பமுடனே உன்றனன்பை வைத்து என்தன்

தாகத்தைத் தீர்ப்பாயே தயாநிதே !

(ப)

கருணை புரிந்தென்னைக் காத்தருள்வாயே

கரிராஜ போஷ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/67&oldid=1559534" இலிருந்து மீள்விக்கப்பட்டது