இந்திர மோஹனா
தினமும் உன்தனுடைச் சரணகமலந்தன்னை நம்பிப் பணிந்திருக்கும் தாசன்.
51
(~)
ஜகதீசா! நான் என் செய்வதென்று ஒன்றும் தெரியவில்லை. என்னவோ தலைசுற்றுகிறது. மயக்கம் வருகிறது. இங்குப் படுக்கக்கூட இடமில்லை. (சுற்றிப் பார்த்து), அதோ இருக் கும் செடியின் கீழ் ஒரு திண்ணை தெரிகிறது. அதில் படுத் துக்கொள்வேன். (திண்ணையருகில் சென்று), கருணாகரா! நீ தான் இவ்வேழையைக் காக்கவேணும்.
கடலமுதே ! தேனே! என் கண்ணே ! கவலைப் படமுடியாதென்னை முகம்பார் நீ பராபரமே! என்புருகி நெஞ்சம் இளகிக் கரைந்து கரைந் தன்புருவாய் நிற்கவலைந்தேன் பராபாமே ! இன்று புதிதன்றே ? எளியேன் படுந்துயரம் ஒன்று மறியாயோ வுரையாய் பராபரமே !
ஆ! என்னையுமறியாமல் மயக்கம் மேலிடுகிறது. இக் கொடிய காட்டில் நித்திரை செய்ய நான் தன்னந் தனியாய்ப் படுக்கிறேன். நல்லபடி யெழுந்திருப்பேனோ மாட்டேனோ; எல்லாம் உன் செயல். ( படுத்து நித்திரை போதல்).
(பாம்புப்பிடாரன் பிரவேசம்.)
பிடாரன்- ஐயோ! நான் பிள்ளைக் குட்டிக்காரனாச்சே. மூணுநாளா வவுத்துக்கில்லாமே பட்டினியாசாரோமே. அய் யோ! நாங்க செத்தாலுஞ்சாரோம். (த ன்கையிலிருந்த பாம்பைப் பார்த்து), இந்த பாம்பு சாவாமேயிருந்தா போதும். அது இத்தன வுண்டு வவுத்துக்குக்கூட பாலு கீலு ஒன்னும் ஆம் பிள்ளையே. ஏ நாகேந்திரா! ஒன்னாலே என் சம்சார மெல்லாம் வவுறு பசிக்காமே துண்ணோமே. இத்தினிநாள