பக்கம்:இந்திர மோகனா.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

இந்திர மோஹனா

எங்களெ சவுரட்சனெபண்ண ஒனக்கு அம்மிட்டு பாலு வாக் கவும் கதியில்லையே. அய்யோ! நேத்துராத்ரி பிடிச்சுக் குண்ணு உன்னே யெடுத்துக்கிணு எத்தனையோ காடு கீடெல் லாம் சுத்திக்கிணு வந்தேன். வொரு மனிசாகூட எணு கண் ணுக்கு ஆம்படல்லையே. இத்தனை தூரம் நடந்து வந்ததாலே காலுகீலு யெல்லாம் நோவுதே. வெலவெலனு வருதே. (ஆகாயத்தை நோக்கி), அய்யோ ! பொயுது விடியு நேரமாய் பூடுசே. இந்நேரத்துக்கு ஒரு நாய் சேரலாம்னு ஓடிஓடி நடந்தாந்தும் இண்ணம் காட்டிலேயே கடக்குறோமே. அய்யய்யோ ! இனிமே யென்னாலே ஒரு அடி கூட யெடுத்து வெக்க முடியாது, யெதுவான அம்முட்டு என்னாக ராஜா க்கு ஆம்பட்டாபோதும். பெட்டியிலிருக்கும் பாம்பைப் பார்த்துக் கையாலே சீண்டி), ஐயோ ! கண் தொரந்து பாக்க லேயே. (ஊது குழலெடுத்து ஊத, பாம்பு சிறிது எழுந்தி ருக்கிறது.) ஆ நாகா! ஏந்தையா? (அதைக் கையில் கைத்துக் கொண்டு பாடுகிறான்.)

(ஆடு பாம்பே யென்ற மெட்டு)

என்செய்வேன் எங்குய்வேன்

யாரிடம் சொல்வேன் - உன் பசி

எவ்விதம் வெல்வேன்?

என் நாகப்பா, கரு நாகப்பா,

ஆரணியந் தன்னில் நம் பசி

யார் தணிப்பாரோ

என்னருஞ் சொர்ணமே- என்னை ஆதரித்த சர்ப்பமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/69&oldid=1559536" இலிருந்து மீள்விக்கப்பட்டது