பக்கம்:இந்திர மோகனா.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திரமோஹனா

53

ஜீவனன் :(நித்திரையி லிருந்து எழுந்து) ஆ ! இது என்ன கானம் ! எவ்வளவு இனிமையாயிருக்கின்றது ! யார் பாடுகிறார்களோ, தெரியவில்லை. மந்த பாக்கியனான எனக் கும் இவ்விதமான கானம் துயரமென்பதை மறக்கச் செய்து ஆனந்தபரவசப் படுத்துகிறது. இந்தப் பாட்டு யாரோ பாம்பாட்டி பாடுவதுபோ விருக்கிறது. அர்த்த ராத்திரியில் இந்தக் கொடுமையான வனத்தில் பாடவேண்டிய காரணம் என்ன? ஒரு கால் நம்மைப்போல் வழி தப்பி வந்தவனோ இவன்? அருகில் போய் விசாரிப்போம். (ஆகாயத்தைப் பார்த்து), ஆ ! என்ன மதிமோசம் போனோம். ? பொழுது விடிய அரை ஜாமந்தானிருக்கிறது. நாம் நன்றாய்த் தூங்கி விட்டோம். நல்லவேளை. இரவெல்லாம் ஒரு நொடியிற் போய்விட்டது. இனி என் செய்வது.? எங்குய்வது? ஈசா ! யாவும் உன் திருவிளையாடலே !

(பாம்புப் பிடாரன் பாடிக்கொண்டே வருகிறான்.) ஷை மெட்டு

என்குட்டி நாகேந்த்ரா

என்னை யெட்டிப் பாரேண்டா !

பசிதாகமோ நாகா!

என்மேல் கோபமோ நாகா!

மறந்தாயோ யென் தனை

அரவரசே ! செல்வா !

ஜீவனன் - அதோ யாரோ வருகிறான்; அவன் தான் ஒருகால் பாடியிருப்பனோ? (உற்றுப்பார்த்து), ஆம். அவன் தானிருக்கவேண்டும். அவன் கையில் பாம்புவைக்கும் பெட் டியிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/70&oldid=1559537" இலிருந்து மீள்விக்கப்பட்டது