பக்கம்:இந்திர மோகனா.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

இந்திர மோஹனா

பிடாரன்:ஆ! அதோ யாரோ இருக்காங்கோ. அவுங் களே பாத்தா மகாராஜாபோலே இருக்குது. நம்கு ஏதாச்சும் ஆம்ப்டும். நம் நாகராஜா வவுத்துக்கு போட்ளாம். (எதிரில் சென்று பெட்டியைக் கீழே வைத்துவிட்டு வணங்கி), சாமி! கும்பிட்றேன். தர்மப்ரபுவே! வவுத்துக்கில்லாமே ரெண்டு நாளா இந்தப்பாம்பும் நானும் சாவுரோம். தயவு சேஞ்சு ஏதாச்சும் தந்திங்களானா ஒங்களுக்கு புண்யமுண்டு சாமி ! எங்கிருந்து வந்தாய்? ஜீவனன்:-நீயாரப்பா! ருக்குப்போகிறாய்? நீ வைத்துக்கொண்டிருப்பது என்ன ஜாதிப்பாம்பு?

எந்து

பா. பிடாரன்:- சாமி ! எங்கவூரு ஒரு நாட்டுபுறங்க. இந்தப் பாம்பாலே நானு ஊர்வூரா திரிஞ்சி ஜீவனம் பண்ற துங்க. இந்தத்தபா வயிதெறியாமே காட்லே மாட்டிகிணே சாமி! அதாங்கோ வவுத்திக்கி இல்லாமே பூடுசு. (பாடுகிறான்).

(நந்தனார் சரித்திரம் பழனமருங்கணை என்றமெட்டு.)

ராசம்.

புன்னாகவராளி.

பசியோபொறுக்கவில்லை-என்தன் பாம்புக்கும் உணவு கிடைக்கவில்லை. இரவெல்லாம் கடந்துவந்தும்—சிறு கிராமங்களும் கண்ணில் காணவில்லை. பாழுங்காட்டில் வந்தலைந்தோம்- துஷ்ட சிங்கம் கரடி புலியின் கர்ஜனையைக் கண்டு மிகப்பயந்து - ஐயா ஓடி ஒளிந்து தப்பிச் சேர்ந்தேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/71&oldid=1559538" இலிருந்து மீள்விக்கப்பட்டது