இந்திர மோஹனா
இந்தப் பாழும் வனந்தன்னில்—ஐயா
உங்கள் தயவாலே நாகனுடைய பசியைத் தணிக்கவேணும்—ஐயா சித்தமிரங்கியே மெத்தவுபகாரம் செய்து காக்கவேணும் - உங்கள் தாளிணை பணிந்தேன் தயவுடன்காரும் கொம்பேறி மூக்கனல்ல-இது விரியன் கத்தரிப்பாம்புமல்ல கட்டுப்புனையனுமல்ல -இது
எண்ணெப்புனையன் கண்குத்திப்பாம்புமல்ல பச்சைச்சாரையுமல்ல-ஆதி சேஷனென்றுபெயர் கொண்டசர்ப்பமிது பாரும் சாமியாரே ! இதைப் பார்த்து மனமகிழ்ந்து தாருமையா நாகராஜனுக்குணவு-பசி
தீரத்தந்து மிகஆசிபெறுவீரே பன்னகனிடத்தில் - சாமி
சாதுக்களே மகாயோகிகளே.
55
(பசியோ) ஐயா! சாமி! ஆதிசேஷன் வவுத்துக்கு ஏதாச்சம் தயவு செய்யுங்கோ.
ஜீவனன்:-அப்பா! உன்னைப்பார்த்தால் மிகப் பரிதாப மாயிருக்கிறது. நானும் உன்னைப்போல மூன்று நாளாய் அன்னமில்லாமல் இக்காட்டில் அலைகிறேன். உன் பாட்டைக் கேட்டதும் என் பசி பறந்தோடிவிட்டது. அப்பா ! என்னி டம் ஒன்றுமில்லை. இந்தச்சிறிய மூட்டையொன்று தானிருக் கிறது. இதை வேணுமானால் கொடுத்துவிடுகிறேன். இதி லிருப்பதை எங்காகிலும் விற்று ஜீவனம் செய்துகொள். (சிறுமூட்டையைக் கொடுக்க அதை அவன் வாங்கிக்கொண்டு சந்தோஷத்துடன்),