இந்திர மோஹனா
57
ருக்கும் நிலைமையென்ன? ஹும். பெண்ணாய்ப் பிறப்பதே கஷ்டம். அதினும் தாயற்றிருப்பதைவிட கேவல நிலை உல கில் என்னவிருக்கிறது? (சற்று நிதானித்து), யாரோ வரு காலோசை கேட்கிறது. யார் வருகின்றார் களோ தெரியவில்லை. (தரங்கவதி பிரவேசிக்க), தரங்கவதி! வா. ஏது இவ்வளவு தூரம்? என்ன விசேஷம் ?
வதுபோல்
தாங்கவதி:- அடீ மோஹனா!
மோஹ:- (திடுக்கிட்டு) ஐயோ! என் பிழைப்பு இந்த ஸ்திதிக்கு வந்துவிட்டதா? என்னை ஒரு வேலைக்காரி அடீ என்று பேரைச்சொல்லி அழைக்குங்காலம் வந்துவிட்டதா! ஆ! என்ன கொடுமை! எல்லாம் என் தலைவிதி-என்ன அம்மா ! ஏன் நிறுத்திவிட்டீர்கள்; சொல்லுங்கள்.
தர:-
(நந்தனார் சரித்திர கீர்த்தனையில் அடக்கியாளுமையே என்ற வர்ணமெட்டு.)
ராகம்: அடாணா : ஆதிதாளம்.
பல்லவி.
தந்தை வருகச்சொன்னார்.-உன்னை அனுபல்லவி.'
இந்த க்ஷணத்திலே தந்தையருகிலே. வேகமுடன் அனேக சேதி சொல்ல
(த)
(த).
மோஹ:- ஆ என்ன! என்ன! என் தந்தையா அழைத்
தார்? யாது காரணம் ?
ஷை மெட்டு.
அழைத்த காரணத்தைச் சொல்வாய்
(அ)