58
இந்திர மோஹனா
அழைத்த காரணத்தை அறிவிக்கலாகாதா? அடியாள் மீதினில் இரக்கங்கொண்டு- நீ
(அ)
தர:- அடி மோஹனா ! நீ கேட்பது வெகு அழகாயி ருக்கிறது. தந்தையழைத்தாரென்றால் உடனே வாரியடித் துக்கொண்டு ஓடிவராமல் காரணத்தைச்சொல் தோரணத் தைச்சொல் என்கிறாய்! இருக்கட்டும். ராணியம்மாளிடத் தில் சொல்லி உன்னை என்ன பாடுபடுத்துகிறேன்,பார். வரு கிறாயா இல்லையா? என்ன வெறுமனே இருக்கிறாய்?
மோஹ.-ஜகதீசா! சிற்றன்னைதான் என்னை ஏளனம் செய்யவைத்தாய். அவள் தாதியுங்கூட என்னை ஏசிப்பேச வேண்டுமோ? நான் அவளை நடத்தவேண்டிய விதமெல்லாம் அவள் என்னை நடத்துகிறாள். ஆ! என்ன பெண் பிறந் தேன்! (ஆத்மகதமாய்), என்மேல் இல்லாத குற்றமெல்லாம் எடுத்தோதி அந்தச் சித்திராங்கிக்கு இன்னும் கலகத்தை விளைவித்துவிடுவாளே. ஐயோ! அங்குப் போனால் அவள் என்ன பாடுபடுத்தப்போகிறாளோ? உம். எது வந்தாலும் அனுபவித்தே தீரவேண்டும். (பிரகாசமாய்), வாருங்கள் அம்மா! போகலாம். (இருவரும் நிஷ்க்ரமித்தல்.)
மூன்றாவது களம் முற்றிற்று.
இரண்டாவது அங்கம்.
நான்காவது களம்..
இடம்:- சந்திரபுரியின் அரண்மனை. காலம்:- பிற்பகல். (குணசேனனும் சித்திராங்கியும் வீற்றிருந்தபடி பிரவேசம்.)
சித்: - நாதா! அந்தச் சிறுக்கி வரமாட்டாளென்று சொன்னேனே. அப்படியே வரவில்லை, பாருங்கள். தரங்க