இந்திர மோஹனா
59
வதி சென்று எவ்வளவு நாழியாயிற்று. இன்னும் வரவில்லை யே. அவளை என்ன ஏளனம் செய்கிறாளோ! இல்லாவிட்டால் இந்நேரம் அவள் அங்குத் தங்கமாட்டாள்.
குண:-சித்ரா! அவசரப்படாதே. தரங்கவதி அவளை யழைத்துக்கொண்டுதான் வருவாள். அந்தக் கழுதை வரட் டும்; தக்க மரியாதை செய்தனுப்பலாம்.
சித்:-போதும்.
சித்:- போதும். உங்கள் வாய்ச்சொல்லோடு சரிதான். அவள் எதிரில் வந்தால் பல்லிளித்துப் போய்விடுகிறது. பின் னால் சொல்வதிற் பயனென்ன? அன்றைக்கு அவள் சொன்ன சொல் என் காதை விட்டுப் போகவேயில்லை. "மாற்றாந்தாய் மாற்றங் கேட்டுக் கடிமணம் செய்வதாலே கெடுதிகள் சம் பவிக்கும்" என்று உங்களெதிரிலே தானே சொன்னாள். அதற்கு நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள் ? அப்படித்தான் இப்பவும் நடக்கும். எல்லாம் என் தலைவிதி. சொல்லி யென்ன பயன்?
யாரைச்
குண:- சித்ரா! ஏன் மனதை நோக வைத்துக்கொள் கிறாய்? அன்றைக்கே நான் கடிந்து உதாசீனமாய்ப் பேசிவிட்டு அங்கு நில்லாமல் வந்துவிட வில்லையா? உன்னை அலக்ஷ்யஞ் செய்து 'நான் பார்ப்பேனா ? நீ கவலைப்படாதே. அதோ காலோசை கேட்கிறது; வருகிறாள் போலிருக்கிறது.
மோஹனாவும் தரங்கவதியும் பிரவேசம்.) மோஹ: (கைகூப்பியவண்ணம் பாடிக்கொண்டே வரு கிறாள்.)