பக்கம்:இந்திர மோகனா.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

இந்திர மோஹனா

(வாசுதேவனே யென்ற மெட்டு)

வந்தனம் செய்தேன் தந்தை யுங்கட்கு மங்கை யானுமே மகிழ்வுடனே நான்

என்தனை இவ்விடத்தில் அழைத்த காரணம் யாதென்றெடுத்துரைக்கக் கோருகின்றேன்.

சித்ராங்கியைப் பார்த்து) சிற்றி ! வந்தன மளிக்கிறேன். (சித்ராங்கி முகத்தைச் சுளித்துத் திருப்பிக்கொள்கிறாள்). குண:-பெண்ணே! மோஹனா! உனக்குப் புதியதாய்ச் சொல்லப்போவது ஒன்றுமில்லை.

ராகம்: காம்போதி

செப்பிய மொழியை மாற்றிச் செய்குவே னென்று பேதாய் தப்பி எண்ணவேண்டாம் தாதைசொல் மாறிடாமல் ஒப்பிநீ உன்றன் நெஞ்சை உத்தமச் சாணக்யன்பால் துப்புறவைப்பாய் என்தன் தூயநற் கரும்பேமானே !

கண்ணே! இன்றைக்குப் புதன்கிழமை யல்லவா ? நாளை வெள்ளிக்கிழமை யன்று விவாக முகூர்த்தம். நடக்கவேண் டிய ஏற்பாடெல்லாம் ஆய்விட்டது. வரவேண்டிய ஜனங்க ளெல்லோரும் வந்துவிட்டார்கள். சாளுவதேசத் தரசரின் பந்துக்கள் உன்னைப் பார்க்கவேண்டுமாம். அந்தப்புரத்தி லிருக்கிறார்கள். சிற்றன்னையுடன் சென்று அவர்களை நமஸ் காரம் செய்துவிட்டு வா.

கித் : போதும், போதும். இவளை நான் அழைத்துக் கொண்டு போகவேண்டுமா? அன்றைக்கு அத்தனை நகை களைக் கொடுத்தனுப்பினேன். இன்னும் அவற்றை யணிந்து கொண்டாளா? பாருங்கள். வீடு பெருக்கும் வேலைக்காரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/77&oldid=1559544" இலிருந்து மீள்விக்கப்பட்டது