பக்கம்:இந்திர மோகனா.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

61

போலத் தடிமரமாய் நிற்கிறாளே. இவள்பவிஷைப் பார்த் தால் யாவரும் நகைப்பார்கள். அன்றைக்கு உங்களெதிரி லேயே என்னை ஏசின இவள் அவர்களெதிரில் எவ்விதமாய் அவமானம் செய்வாளோ ! இந்தப் புழுக்கைச் சிறுக்கியின் முகத்தைப் பார்த்து நான் அழைத்துக்கொண்டு போவேனா?

(மோஹனா தலைகுனிந்து கண்ணீர்வடிய நிற்கிறாள்).

குண:- அடி பெண்ணே ! நீ யேன் ஆடையாபரணங்க ளொன்றையும் அணிந்துகொள்ளாமல் வேலைக்காரி வேஷத்து டன் நிற்கிறாய்? உன்சிற்றி அனுப்பிய ஆபரணங்களெல்லாம். எங்கே? சீக்கிரம் போய் அணிந்து கொண்டுவா.

மோஹ :- அப்பா ! தாங்கள் சொல்வது எனக்கொன் றும் விளங்கவில்லை. சாளுவ தேசத்தரசன் பந்துக்கள் என்னை யெதற்குப் பார்க்கவேண்டும்? அவர்களுக்கும் எனக் கும் யாது சம்பந்தம்?

குண :- புத்தி கெட்ட நாயே ! நான் சொல்வதைத் தள் ளிவிட்டு நீ வீண் பேச்சு பேசிக் காலத்தைக் கடத்துகிறாயா? சீக்கிரம் அலங்காரம் செய்துகொண்டுவா. மணப்பெண்ணைக் காணக் கணக்கற்றபேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மோஹ:- ஐயோ ! ஐயனே ! தங்களிடம் நான் பன் முறை முறையிட்டும் இந்த விவாகப் பேச்சையே பேசி என் மனத்தைப் புண்படச்செய்வது நன்றோ ? நான் வெட்கத்தை விட்டு வெளிப்படையாய்ச் சொன்னபிறகுகூட என்னை இவ்வி தம் பரீக்ஷிக்கவேண்டுமா? அப்பா! நான் உங்கள் வயிற்றில் பிறந்ததற்காகவாவது என்மேல் தயை கூர்ந்து நிறுத்தலா காதா? ஐயோ ! என் தாயிருந்தால் இவ்வித விவாகம் நடக் குமா? அப்பா ! தயவு செய்யவேண்டும்.

!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/78&oldid=1559545" இலிருந்து மீள்விக்கப்பட்டது