பக்கம்:இந்திர மோகனா.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

இந்திர மோஹனா

ராகம்: தன்யாசி.

தந்தையே என்தன்மீது தயவுடன்காத்திவ் வேளை விந்தையாம் சொல்லைவிட்டு விம்முறுஞ் சிறுமிதன்னை எந்தையே பாராவிட்டால் ஏது செய்கிற் பேனப்பா சந்தையிற்செல்வோரெல்லாம் தகுவரோ துணையாதற்கே!

குண:-அடி கழுதை ! என் உன் வாயில்வந்தபடியெல் லாம் உளறுகிறாய்? சீ முட்டாளே! (கோபத்தோடு சீறி எழுந்து), உனக்கு இவ்வளவு கர்வமா இருக்கிறது? ஹும் இருக்கட்டும். உன் ஜபம் பலிக்கிறதோ, என் ஜபம் பலிக்கி றதோ, பார்ப்போம். இந்தக்கலியாணத்தை முடிக்காவிட் டால் என் பெயர் குணசேனனல்ல. நான் சொல்வதைக் கேட்கப்போகிறாயா, இல்லையா? சீக்கிரம் போ. இல்லாவி டில் உன்னைத் தள்ளிக்கொண்டு போகச்செய்வேன்.

மோஹ:- (தந்தையின் கால்களைப் பிடித்துக்கொண்டு பாடுகிறாள்.)

ராகம்: சங்கராபரணம்;

தாளம்: சாபு.

(நானென்ன செய்குவேன் மாமி என்ற மெட்டு.)

பல்லவி.

நானென்ன செய்குவேன் அப்பா !

நானுங்கள் அருமகளல்லவோ

அனுபல்லவி.

சினங்கொண்டு உங்கள் புதல்வியை நீர் வைதால்

(BIT)

யாரிடம் சென்று என் வருத்தத்தைப்போக்குவேன். () குண:- அடி துஷ்டே ! நீயா என் புதல்வி ! என் புதல் வியாயிருந்தால் நான் சொல்வதைக் கேட்கமாட்டாயா? சீச்சீ !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/79&oldid=1559546" இலிருந்து மீள்விக்கப்பட்டது