முகவுரை.
"இந்திர மோஹனா" என்னும் இந்நாடகநூல், பெரும் பாலும் தனக்குரிய அங்கங்களுள் குறைபாடின்றி விளங்கி யுள்ளது. இதனுள் சோகரஸம் அங்கியாகவும் மற்றையரசங் கள் ஆங்காங்கு அங்கங்களாகவும் வந்துள்ளன. பிற நாட கங்களைப் போலச் சிருங்கார ரஸத்தை, ஆபாஸமாகக் காண் பியாது கம்பீரமாகக் காட்டுந் தன்மைவாய்ந்த இந்நூலில்பற் பல இடங்களில் இசைநூலுக் கேற்ப வர்ணதாள மெட்டுக்க ளடங்கிய பாடல்கள் படிப்பவர்க்கு மிக்க ஊக்கத்தை யுண் டாக்குந் திறமை பெற்றுத் திகழ்ந்துள்ளன.
இந்நாடக நூலிற் கூறப்படுங் கதையின் தேர்ந்தபொருள்:- சந்திரபுரி அரசனது மகளாகிய மோஹனா வென்பாள் தனது சிற்றன்னையாலும், அவளது காதல் வலையிற் சிக்குண்டுழன்ற தனது தந்தையாலும் பலவிதமாகப் பீடிக்கப்பட்டுப் பின்பு அவர்களால் தனக்குத்தகாத ஒருவனை மணக்க நேரிட்ட போது, அதனை வெறுத்துவிட்டு உயிர்விடக்கருதி வனம் சென்று அங்குத் தன்னால் முன்னமே காதலிக்கப் பெற்ற பத்மபுரி யரசகுமாரனைத் தற்செயலாகச் சந்தித்தாள். பின் னர் அவனும் இவளை யடைந்து தனது கஷ்டங்கள்யாவும் நீங்கப்பெற்று உயிரிழக்க நேர்ந்த தனது தாய்தந்தையரையும் காத்து ராஜ்யத்தை யடைந்து சுகமுற வாழ்ந்தானென்பது.
நாடக வியலுக்குத் தக்கபடி இந்நூல் பாத்திரங்கள் யாவும் தக்கவாறு அமையப்பெற்று மணிகளின் குணமறிந்த தொழிலாளியால் ஆக்கப்பட்டு விளங்கும் அணியைப்