பக்கம்:இந்திர மோகனா.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

63

தந்தை சொல் கேளாத தறிதலை மகளே ! என் எதிரில் நில் லாதே, நாயே!

(ஆண்டவன் மித்திரன் என்ற மெட்டு)

'சீச்சீ! போ! துஷ்டநாயே! என் முன் நில்லாதே செல்வாய் என்தன் சொல்லை மறுத்து வெகு வீம்புகள் பேசுகின்றாய் (சீ) மோஹ:-அப்பா! (ஷ சரணம் சங்கராபரணம்) அடியாள் மீதினிலே இரக்கங்கொண்டு நீவிர் கடிமணமென்கிற மொழிதன்னை மறப்பீரே. (நா)

தந்தையே! தாங்கள் ஒரே பிடிவா தமாய் இந்த மணத்தை முடிப்பதனால் அநேக தீங்குகள் நேரிடுமென்பதை நான் முன்னமே சொல்லியிருக்க, நான் அதை மறுபடியும் சொல்ல வேண்டுமா? தங்களுக்குத் தெரியாத நீதி யாதிருக்கிறது? நம் ராஜ நீதியில் பெண்கள் யுக்த வயது வந்த பிறகு தங்கள் மனதிற்கிசைந்த மணாளனை மணஞ்செய்து கொள்வது வழக்க மாயிருக்க, அதை விட்டு இப்போது மாற்றாந்தாய் சொல்லைக் கேட்டு அவள் மனதிற்கிசைந்தவனை நான் மணப்பது தகுபோ?

(நந்தனார் சரித்திர கீர்த்தனையில்

நியாயந்தானோ நீர்சொல்லும் என்ற மெட்டு.) ராகம் - சங்கராபரணம். தாளம் ஆதி.

பல்லவி.

நியாயந்தானோ நீர்சொல்லும்

ஓய் தந்தையாரே நம் நீதிக்கடுக்குமோ

(நி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/80&oldid=1559547" இலிருந்து மீள்விக்கப்பட்டது