பக்கம்:இந்திர மோகனா.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

இந்திர மோஹனா

அநுபல்லவி.

நீதியிலில்லா வழக்கம் நீர்செய்து கொள்கிற பழக்கம் எந்த ராஜருக்கது முழக்கம் இந்தக் கடிமணம் செய்வது

அடுக்கும்

சித்:- பேஷ்! பேஷ்! நிரம்ப நன்றாயிருக்கிறது,

ராகம் மோகனம்.

()

போதுமே சிறுக்கி உன்றன் புல்லிய மொழியாலிங்கு வாதுகள் பேசவேண்டாம் வகையிலா மூடமே நீ தீதுகள் செய்தேனென்று துணிவுடன் செப்பியே நற் சாதுவைப் போலேயிங்கு சாற்றுகின்றாய் துஷ்டி மூரி! மோஹனா :- (கண்ணில் நீர்வடியத் தந்தையைப் பார்த்து)

ஐயனே!

ராகம் - முகாரி.

எருமை யென்றென்னை யன்னை ஏளனஞ் செய்யவும் நீர் அருமையாயீன்ற விந்த அபலையின் கண்ணீர் சிந்தப் பெருமையாய்ப் பார்த்திருத்தல் பெரியதோரழகோ நிற்குச் சிறுமை நானடைய வேண்டிச் சிருட்டித்தான் பிரமன் பாரில்

குண:-அடி கழுதை ! என்ன சொன்னாய்? உன்னைப் பெற்ற பெண் போல் பாதுகாத்து வரும் சிற்றியை எவ்வளவு இகழ்ச்சியாய்ப் பேசினாய்? அடி ! உன் சொல் கேட்பவன் நானல்ல. உன்னைச் சாணக்கியனுக்கு முடிசூட்டி வைத்து எக் கதிக்கு ஆளாக்குகின்றேன் பார். சிற்றன்னையின் மனதைப் புண்படுத்திய சிறுக்கியே! நாளன்றைக்கு இந்நேரம் உன்துள் ளலெல்லாம் எவ்விதம் பறக்கிறது, பார். சித்ரா ! வருத்தப் படாதே. வா. போகலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/81&oldid=1559548" இலிருந்து மீள்விக்கப்பட்டது