இந்திர மோஹனா
65
மோஹனாவை காலால் உதைத்துத் தள்ளிவிட்டு நிஷ்க்ர
மித்தல்).
(சாகரீகா பிரவேசித்து மோஹனாவைத் தூக்கிப் பிடித்துக் கொள்கிறாள்.)
மோஹ:- தெய்வமே ! என் தலைவிதி என்னைக் காலால் உதைத்துத் தள்ளவுமாய் விட்டதோ ! மாநிலத்தில் பிறந்த தற்குப் பலனிதுவோ ஜனார்த்தனா ? அபலை யான் என் செய் வேன் ?
(நந்தனார் சரித்திர கீர்த்தனை மார்கழிமாதம்.
என்ற மெட்டு).
பல்லவி.
மாநிலம் புகழும் மன்னன் வயிற்றினில்
பிறந்ததின் பயனிதுவோ !
மாற்றாந்தாய் மொழியாலே பெற்றதந்தையு மென்னை
நெட்டித் தள்ளலு மாச்சோ !
ஐயையோ யானிந்த அவனிதன்னிலே
ஆடல்படவும் விதியோ !
ஆண்டவனருளாலே என்னுடை நாதனை
நானடைக்குவேனோ ?
சாக:- அம்மணி! விசனப்படாதீர்கள்.
ராகம் : சாவேரி.
வருந்தினால் பயன்தானென்ன வனிதையே துயரவேண்டாம் பொருந்தி நீர் பதுமநாபன் பொன்னடி பணிந்தவாறே இருந்திட்டினு மதவ்வெண்ணம் ஈடேறுமென்று நீர்தாம் தெரிந்திடீர் சில நாளைக்குள் தெரிவையேபொறுக்கவேண்டும்.
5