பக்கம்:இந்திர மோகனா.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

இந்திர மோஹனா

மோஹ.- சகி! நான் பதிவிரதை வயிற்றில் பிறந்த உத் தமியாயிருந்தால் இந்தத் தம்பதிகள் முன்னிலையில் எந்நாத னுடன் வந்து சேர்வது திண்ணம். ஈசா! என்னைக் காக்க வேணும்.

(இருவரும் நிஷ்க்ரமித்தல்.)

நான்காவது களம் முற்றிற்று.

இரண்டாவது அங்கம். ஐந்தாம் களம்.

இடம் :- மோஹனாவின் அந்தப்புரம் :

(சாணக்கியன் பிரவேசித்தல்.)

காலம்: மாலை.

சாண:- -ஹி, ஹி; நானு இங்கே வந்தூட்டேனே.

(தலை சொறிந்த வண்ணம்

சாய்ந்து நடந்துகொண்டு)

மோஹனா ! மோஹனா ! ஹி ஹி. ஏனென்னு சொல்லல்லையே?

நானு யார் தெரியுமா ?

(நகுமோமு கனலேனி யென்றமெட்டு)

பல்லவி.

ஜகமெல்லாம் புகழ்பெற்ற சாணக்கியன் நானன்றோ சாளுவத் திளவரசன் அத்தையின் மருமகன்.

(8)

(தலை சொறிந்து ஹிஹிஹி என்று நொட்டைவிட்டுக்கொண்டு)

அனுபல்லவி.

ஜகன் மோகனாங்கியை மணக்கும் மணாளன் நான்

வீரன் தீரன் சூரன் எழில்மாரன் நடையில் ஒய்யாரன். (ஐ)

சரணம்.

குணசேனன் முடியை என் சிரசினில் சூட்டவல்ல கொடையாளன் நானன்றி வேறொருவனுளனோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/83&oldid=1559550" இலிருந்து மீள்விக்கப்பட்டது