பக்கம்:இந்திர மோகனா.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திரமோஹனா

சித்திராங்கி தேவியின் மருமகனல்லவோ

67

ராமன் பீமன் காமன் மூவரும் நானென்று எல்லோரும். (ஐ) அடி மோஹனா ! எங்கே இருக்கேடி.

(விதூஷகன் பிரவேசித்தல்.)

விதூஷகன்:என்ன இது? யாரோ பாடுகிறாப் போலி ருக்கிறது.(கதவின் வழியாகப் பார்த்துச் சாணக்கியன் இருந் ததைக் கண்டு) ஒ ஒ ! இந்தச் சமத்து தானோ இங் இங்கே மோஹனாவைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறது. இதை நான் கொஞ்சம் வேடிக்கை பண்ணுகிறேன். (கதவண்டை போய் குர்ர் என்கிறான்.)

சாண:-மோகனா! எங்கே இருக்காய். இதோ வந்து விட்டேன். (நொண்டிக்கொண்டே கட்டிலிற்போய்ப் படுத்துக் கொண்டு தலையணையை மோகனா வென்று கட்டியணைத்து) அடீ மோகனா ! நான் தான் உன் மருமான். அல்ல, அல்ல. என் அத்தைக்கு மருமகன். உன் புருஷன். ஏண்டி மோகனா! பேசாம லிருக்கிறாய். எழுந்துவா. நாம் போய் விளையாட லாம். ( என்று தலையணையைக் கையிலெடுத்துக் கீழே யிறங்கி மோகனா இல்லாததைக் கொண்டு) ஐயோ ! மோகனா எங் கேயோ ஒடிப்போய் விட்டாளே. அடீ மோகனா எங்கடி பூட்டே.

விதூ :- (மறைந்தபடியே சிரித்துக்கொண்டு) இதோ. இருக்கிறேன்.

சாண:- (மூலைமூலையாய்த்தேடிக்கொண்டே)எந்த மூலை யிலே இருக்காயடீ மோகனா ! (எங்கும் அவளைக் காணாமல்) மோகனா ! எங்கே ஓடிப்போய் விட்டாய்? என்னை ஏமாற்றலா மென்று பார்க்கிறாயா? நான் யார் என்று நினைத்தாய் ? சாளு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/84&oldid=1559551" இலிருந்து மீள்விக்கப்பட்டது