68
இந்திர மோஹனா
வத்திளவரசனான சாணக்கியனல்லவா? சித்திராங்கியின் அண் ணன் பிள்னையாச்சே! என்னை உன்னால் ஏமாற்ற முடியுமா P கீ எங்கே போனாலும் உன்னைத் துரியோதனன் சீதையைத் தேடிக்கொண்டுவந்த மாதிரி செய்வேன். நீ என்னைக் கலி யாணம் பண்ணிக்கா விட்டால் ராவணன் த்ரௌபதியை மான பங்கம் பண்ண மாதிரி உன்னை பிராண பங்கம் பண்ணு வேன் தெரியுமா ! ஐயோ ! காலெல்லாம் கோகிறது. சற்று உட்காருகிறேன்.
(நாற்காலியைத் தலை கீழாகப் போட்டு உட்காருகிறான்.)
விதூ :- (மறைவிலிருந்தபடியே) ஐயோ ! தலைவிதியே. இவன் பவிஷு இப்படியிருக்க இவனை நம் இளவரசி காலில் கட்டிவிடப் பார்க்கிறாளே அந்தச் சித்ராங்கி. அந்தக் கிழ. மன்னனும் அவள் வலையிலகப்பட்டுத் தன் பெண்ணைக் கட் டாயப்படுத்துகிறானே. இதற்குக் கால் தான் நொண்டியென் றால் புத்தியுமில்லாமலிருக்கிறதே. இந்த முழு பைத்தியத் திற்கு யார் தான் பெண்ணைக் கொடுப்பார்? ஆகட்டும். நான் வேண்டிய ஏற்பாட்டைச் செய்து ராஜாவுக்கு நல்ல புத்தி வரும்படி பண்ணுகிறேன். (திரும்பிப் பார்த்து) ஆ! அதோ மோகனா வருகிறாள். நான் இனி இங்கிருந்தால் நான் தான் இவனை இங்கே யழைத்துவந்ததாக நினைத்துக்கொள்வாள். அதோ அந்த மறைவிலிருந்து என்ன நடக்கிறதோ பார்ப் போம். (மற்றொரு மூலையில் ஒளிந்துகொள்கிறான்.) (மோகனாவும் சாகரீகாவும் பிரவேசித்தல்)
சாக:- அம்மணி! என்ன செய்யலாம். நீங்கள் இவ்வாறு விசனப்பட்டு யாது பயன் ? நாளை ஒருநாள்தா னிருக்கிறது. அதற்குள் பகவான் என்ன செய்வானோ! "கடவுளை நம்பி னோர் கைவிடப்படார்" என்றபடி நீங்கள் மனதைத் தளர விடாமல் பகவானைத் தியானியுங்கள்.