பக்கம்:இந்திர மோகனா.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

69

மோகனா:-சகி! நான் கடவுளைப் பிரார்த்திக்காத நேரம் கிடையாது. அவர் என்னை எக்கதிக்குள்ளாக்குவாரோ? வா. நாம் உள்ளே போய் உட்காருவோம்.

சாக:- (கதவைத் திறக்க அது உட்புறம் தாளிட்டிருப் பதைக்கண்டு திகிலடைந்து) அம்மா! என்ன இது! கதவை உள்பக்கம். தாளிட்டிருக்கிறது. உள்ளே யாரிருப்பார்கள்?

மோகனா: என்ன ஆச்சரியமிது! நாம் போகும்போது கதவைத் திறந்துவிட்டுத் தானே போனோம். யார் புகுந்து கொண்டிருப்பார்கள். (கதவைத் தட்டி) யார் அது உள்ளே ?

சாண:-(உள்ளிருந்தபடியே) நான் தான் சித்ராங்கியின் அண்ணன் பிள்ளை. சாளுவத்திளவரசனான சாணக்கியன்! என்னை யார் என்று கேட்கிற நீ யார்?

மோகனா:- ஐயோ தலைவிதியே! இந்தச் சனியன் இங்கே வந்துவிட்டதே. இதை எப்படித் துரத்துவது?

சாக:-அம்மா!இது லேசில் திறக்காது போலிருக்கிறது. இதைத் தந்திரமாய்த்தான் வெளிக்கிளப்பவேண்டும். இதற்கு ஏம் விதூஷகர் இருந்தால் சரியாயிருக்கும். அவரை எங்குக் காண்பது?

சாண:-யார் அது என்னைச் சனியன் என்கிறது? போய் முன்னே மோகனாவை அவள் மருமகன், அல்ல, அல்ல, அவள் புருஷன் வந்திருக்கிறதாய்க் கூப்பிட்டுக் கொண்டுவா.

சாக:பார்த்தீர்களா அம்மா ! அதன் தைரியத்தை. உங்கள் புருஷனென்று மனந் துணிந்து சொல்லுகிறது.

வி தூ ;-(மறைவி லிருந்தபடியே) அம்மாடி நான் யிழைத்தேன். என்மேல் பழியில்லாமல் நான் வரவில்லையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/86&oldid=1559553" இலிருந்து மீள்விக்கப்பட்டது