70
இந்திர மோஹனா
யென்று சொன்னார்களே, அதுவே போதும். அவர்கள் முன்னே போகிறேன்.
(சதாரத்தில் " நல்லசமயம் நல்லசமயம்" என்றமெட்டு)
நல்லசமயம், நல்லசமயம், நல்லசமயமே
பல்லாண்டாய் வாழவேண்டும் எல்லோருமே:
(15)
நாளைவிட்டு மறுநாள் நமக்கு நிறைய
போளியுடன் ஆமவடை ருசியாய்ப் புசிக்கலாம்.
(ந)
சாகரீகா! சாகரீகா! உன்னைக் காணாமல் கண் மங்கி விட்டது. எங்கெங்கேயோ தேடிவிட்டு இங்கே தானிருப்பா யென்று வந்தேன். (மோகனாவைப் பார்த்து) அம்மா ! நமஸ்- காரம். ஏன் வெளியில் நிற்கிறீர்கள் உள்ளே போகலாமே.
சாக :-அம்மணி ! நல்ல வேளையில் இவர் வந்தார். வருக்கு நூறு ஆயுசு.
விதூ:-அம்மாடி. போதும் போதும். இந்த நாளில் எல்லாரும் அல்பாயுசாக இருக்கிறார்கள். அதற்குள்ளேயே. எவ்வளவோ துக்கம் அனுபவிக்கிறார்கள். நல்ல வேளையாய் எனக்கு அதெல்லா மொன்றுமில்லை. எனக்கு வேண்டிய. இரண்டும் அகப்பட்டுவிட்டால் நான் நூறு இல்லை எத்தனை வருஷமானாலும் சந்தோஷமா யிருப்பேன்.
சாக:- என்ன இரண்டு ?
விதூ:- சொல்லட்டுமா ? ஒன்று நீ என்னைக் கலியா ணம் பண்ணிக்கொள்; இரண்டாவது நானிருக்கும் வரையில் வயிறு நிறைய ஆமவடைவேண்டும். அவ்வளவு தான்.
சாக :- நிரம்ப நன்றாயிருக்கிறது.