72
இந்திர மோஹனா
சாண:--ஹிஹிஹி. நான் சும்மா போவேனா. நீ சொல்கிறதைக் கேட்பேனா. இதோ பார் நான் மோகனாவை என் மடிமேல் உட்காரவைத்துக் கொண்டு விளையாடப் போகி றேன். அடீ மோகனா ! என்னண்டவா. (மோகனாவைப் பிடிக்க ஓடுகையில் சித்திராங்கி அவனுக்குக்கட்டிவைத்திருந்த மரக்கால் கீழேவிழ, அவன் வெட்டிச் சாய்ந்த மரம்போல் கீழே தபீலென்று விழுகிறான். எல்லாரும் சிரிக்கிறார்கள்.)
சாண:- (தனக்குள்) ஐயோ ! அத்தை ! உன் சொல்லைக் கேட்காமல் வந்ததற்குப் பலன் அனுபவித்தாய் விட்டது. மோகனாவுக்குத் தெரிந்துபோய் விட்டதே. இனி என் செய் வேன். (அழுகிறான்.)
விதூ:- (கட்டைக்காலைக் கையிலெடுத்துக் கொண்டு). ! இந்தக் கட்டைக்காலுக்கு எவ்வளவு ஒழுங்கு செய்தி ருக்கிறது? இதற்கு மேல்ஜோடு பூட்ஸ் எத்தனை கோலம். இதெல்லாம் அச்சித்திராங்கியின் சூழ்ச்சியல்லவா. இருக் கட்டும் இவன் வாயாலேயே உண்மையை வரவழைக்கிறேன். (சாணக்கியனைப் பார்த்து) மாப்பிள்ளை ! எப்போது உமக்குக் கால் ஒடிந்துவிட்டது.
சாண:-உம் உம்: மோகனா கேட்கக்கூடாதென்று என் அத்தை சொல்லியிருக்கிறாள். (விதூஷகன் அவனருகில் போய் மோகனா இங்கேயில்லை சொல்லும் என) ஒய்! எனக் குப் பிறக்கும்போதே ஒரு கால் இல்லையாம். அப்புறம் என் அத்தை இந்தக் காலைக் கட்டினாளாம். இது மோகனாவுக்குத் தெரிந்தால் என்னைக் கலியாணம் பண்ணிக்கொள்ளமாட்டா ளென்று என்னை உள்ளேயே என் அத்தை இருக்கச் சொன் னாள். ஐயோ! நான் இப்போது என்ன செய்வேன்?