பக்கம்:இந்திர மோகனா.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




vi

போன்று விளங்கியுள்ளது. ஆனால், நாடக பீஜத்தைக் குறிக்கும் முதலங்கத்தில் நாயக நாயகியரின் ஒருவர்க்கொருவ ருள்ள அன்பு குறிக்கப்படாது நாயகியின் அன்பொன்றுமே குறிக்கப்பட்டிருப்பது, தமிழ் இலக்கணத்துக்கு மாறுபடி னும், வடநூன் முறைப்படி அமைந்து கிடப்பது குற்றத் தின்பாற்படாது. பின்னும் வடநூலில் உஷாபரிணயத்தில் முதலில் அநிருத்தனிடத்துக் காதல் கொண்ட உஷையின் சரிதம் ஈண்டு நினைக்கற்பாலது.

இந்நூலில், சிற்றன்னை தன் சக்களத்திப் பெண்மீது காட் டிய கொடுமை, பெரும்பாலும் மாதர்கள் தமது கருத்திற் கிணங்க ஆடவரை வசப்படுத்துந் தன்மை, ஆடவர் அவர் வயப்பட்டு மயங்கியலைதல் முதலியவை தெளிவாக விளக் கப் பட்டுள்ளன.

இந்நூலாசிரியர், ஸௌ. கோதைநாயகி யென்பார்,பெண்பா லாராதலின் பெண்களுக்குரியகுணம், செயல்முதலியவற்றைத் தெளிவாக எடுத்துக் கூறும் நுண்ணறிவு இவர்க்கு இயல்பா கவே யமைந்துள்ளது என்பது கூறாமலே விளங்கும். இவர் சங்கீத நூலில் தெளிவாகப் பயின்றுள்ளார் என்பது முன் னமே காட்டப்பட்டுள்ளது.

இது பண்டைக் காலத்து நாடகநூல்கள் போலாது தற் காலத்திற் கேற்ப நேரில்கண்டறிந்து களிப்படையும் வண் ணம் திருசிய நூலாக இயற்றப் பட்டமையால் நாடக அரங்கில் ஏறும் சிறப்புடைத்தே.

பெண்கல்வி கூடாதென்பாரும், அதனினும் உயர்தரக் கல்வி தகாது என்பாரும் இந்தப் பெண்மணியின் நாடக நூலைப் படித்தறிந்தால் நெடுங்காலமாகத் தக்க சிக்ஷைவாய்ந்த ஆடவர் இயற்றும் நூல்களினும், சிறிது காலத்திலும் தக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/9&oldid=1559476" இலிருந்து மீள்விக்கப்பட்டது