இந்திர மோஹனா
73
மோகனா :- பார்த்தீரா அவள் சாமர்த்தியத்தை. இந்த முடவனை எனக்குக் கலியாணம் பண்ணிவைக்கவேண்டுமென்று என்ன சூழ்ச்சிகள் செய்து என் தந்தையை ஏமாற்றிவிட் டாள். இந்தச் சனியோடு நமக்கென்ன வேலை? இதைத் தூக் கிக்கொண்டுபோய் அப்பால் போட்டுவிட்டுவாரும்.
சாக:- அம்மணி ! இனி உங்கள் கஷ்டம் முடிந்துவிட் டது. இந்தக் கட்டைக்காலை ராஜாவுக்குக் காண்பித்தால் அவர் மணத்தை நிறுத்திவிடுவார். நீங்கள் தைரியமாயிருங்
கள்.
மோகனா : ஐயோ சகி !
உனக்கென்ன பைத்தியம்? நான் எத்தனையோ தடவை அந்த முடவனைக் கலியாணம் பண் ணிக்கொள்ளமாட்டேனென்றபோது அவர் காதில் படாதது போலிருந்துவிட்டார். அவர் இளையாள் மோகத்தி லீடுபட்டு ஒன்றையும் கேட்கமாட்டேனென்கிறார். இன்று காலையில் என்னெதிரில் நில்லாதே நாயே யென்று காலால் உதைத்துத் தள்ளினாரே நீ பார்க்கவில்லையா? இன்னும் ஒரு ஆசை வேண்டுமானால் ஒரு கடிதம் எழுதித் தருகிறேன். அதற்கு என்ன பதில் சொல்லுகிறாரோ பார்ப்போம். வா, உள்ளே போவோம். (இருவரும் உள்ளே நுழைகிறார்கள்.)
விதூ:-மாப்பிள்ளை ! போகலாம் வாரும்.
சாண:-ஐயோ! என் கால் எங்கே? என் அத்தை கோபித்துக்கொள்வாளே. அதைக் கொடும் இப்படி.
விதூ:-ஒய் பயப்படாதேயும். இந்தக்கால் போனால் அத்தை வேறொரு கால் பண்ணித்தருவாள். (நேபத்யத்தில் சாணக்கியா! சாணக்கியா! எங்கேயடாபோய்விட்டாய்?) ஆ! சித்ராங்கியின் குரல்போலிருக்கிறது. நான் புறப் பட்டுப் போய்விடுகிறேன். இப்பொழுது இருட்டிவிட்டபடி