பக்கம்:இந்திர மோகனா.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

இந்திர மோஹனா

யால் நாளைக் காலையில் மகாராஜாவிடம் இந்தக் காலைக் காண் பித்து இக்கலியாணத்தை நிறுத்தப் பார்க்கிறேன். (காலோடு ஓடுகிறான்.)

சாண:-ஐயோ! -ஐயோ! ஒய் ! என் காலைக் கொண்டாரும். என் அத்தை அடிப்பாள்.

(சித்ராங்கி பிரவேசித்தல்.)

சித்:-ஐயோ! கர்மமே இங்கெ ஏனடா வந்தாய்? நான் எங்கேயும் வெளியிலே போகவேண்டாமென்று சொன் னேனே. (அவன் காலில்லாமல் படுத்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டு) அடா பாவி ! என் தலையில் கல்லைப்போட்டாயே உன் கால் எங்கே? தடிமரமே! என்னடா செய்தி (தலையில் குட்டுகிறாள்.)

சாண:-ஐயையோ ! நீ குட்டாமலிருந்தால் சொல்கி றேன். உம்.. நான் மோகனாவைப் பார்க்க இங்கே வந் தேன். அவள் இல்லாததினால் நான் நான் கதவைப் போட்டுக் கொண்டு உள்ளே இருந்தேன். அப்புறம் அவள், தோழி, விதூஷகன் எல்லாரும் வந்தார்கள். நான் கதவைத் திறக்க வில்லை. அப்புறம். ஐயோ! என்ன பயம் தெரியுமா? (சும்மா இருக்கிறான்.)

சித்:- அப்புறம் என்னடா சனியன்; சீக்கிரம் சொல் லித்தொலை. (கன்னத்தில் அறைகிறாள்.)

சாண:-ஐயோ ! என்னை அடிக்காதே. சொல்கிறேன். அப்புறம் பி...சா...சு, பூ...த...ம் எல்லாம் கூச்சல் போட் டது. உடனே நான் பயந்து கதவைத் திறந்துகொண்டு வெளியே ஓடிவந்தேன். அப்போது மோகனா நின்றுகொண் டிருந்தாள். அவளைக் கட்டிக்கொள்ள ஓடினேன். அப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/91&oldid=1559558" இலிருந்து மீள்விக்கப்பட்டது