இந்திர மோஹனா
75
கால் கிழே விழுந்தது. நானும் விழுந்துவிட்டேன். என் னைப்பார்த்து எல்லோரும் பைத்தியக்காரர்மா திரிசிரித்தார்கள். ஆனால் நான்மாத்திரம் அழுதேன். அத்தை! அந்தக் காலை விதூஷகன் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான். மோகனா அவள் தோழியோடு என்னமோ சொல்லிக்கொண்டு உள்ளே போய் விட்டாள். நீயும் வந்தாய். (அசட்டுச்சிரிப்பு சிரிக்கிறான்).
சித்:- (கோபத்தோடு) குடியைக் கெடுக்கவந்த கோட. ரிக்காம்பே ! உன் பவிஷுக்கு சிரிப்பு ஒரு கேடா? நாளன் றைவரையில் உன் பைத்தியத்தை வெளியில் காட்டாமல் உள் ளேயிரு என்று முட்டிக்கொண்டேனே ; கேட்டாயா? ஏற் கனவே அந்தச் சிறுக்கி உன்னைக் கலியாணம் பண்ணிக் கொள்ளமாட்டேன் என்றாளே. இப்போது உன்னை நேரில் இக்கதியில் பார்த்துவிட்டாளே. இனி நான் என் செய்வேன்! நான் எண்ணியிருந்த எண்ணமெல்லாம் வீணாய்விட்டது. அடே பாவி! (அவனைத் தலையில் குட்டி, முதுகில் புடைத்துக் கன்னத்தில் அறைகிறாள்). அந்தக் குமரி தன் தந்தையிடம் போய் இதைச் சொன்னால் என் கதி என்னவாகும்? அக்கிழ மன்னனுக்கு நான் எவ்வளவோ தூபம் போட்டிருந்தாலும், பெற்ற பாசத்தால் அவள்சொல்லைக்கேட்டுக் கலியாணத்தை நிறுத்திவிட்டால், என் செய்வது? நான் முன்னே போய் அரசன் பக்கலிலேயே யிருந்து காரியத்தைச் சாதிக்கவேண் டும். ஐயோ! தலைவிதியே. உன்னால் எனக்கு எவ்வளவு கஷ்டம்? (அவனை நையப் புடைத்து இழுத்துக்கொண்டுபோ கிறாள்). வணக் காப்பக நூலகம் ஐந் தாம் களம பதிற்றறு.