76
இந்திர மோஹனா
மூன்றாவது அங்கம்.
முதற்களம்.
இடம்:- சந்திரபுரி அரண்மனையில் ஓர் பக்கம்.
காலம்:- உதயம்.
(விதூஷகன் வீடுபார்த்தானுடன் ப்ரவேசித்தல்)
விதூ:(கோவில் மாதிரி அலங்காரம் செய்து) தம்பி ! கோவில் என்ன அழகாய் கட்டி விட்டேன், பார்த்தாயா? இனி மேல் நாம் ஸ்வாமியை எழுந்தருளப் பண்ணவேண்டி யது தான் பாக்கி. நம் வேலையாட்களெல்லாம் எங்கே, இன்னும் வரவில்லை ? (நேபத்தியத்தில் "ஓடியாங்கடா, சாமி புறப்பட்ர வேளை ஆய்ப்போட்சு. சீக்கிரம் வாங்கடா") அதோ அவர்களும் வந்து விட்டார்கள். பேஷ் அவர்களைப் பார். பட்டை பட்டையாய் நாமம் போட்டுக்கொண்டு வருகி றார்கள். (வேலையாட்கள் பிரவேசிக்க) வாங்கப்பா, வாங் கோ. எல்லாரும் போய் அந்த அறையி லிருந்து சாமியைத் தூக்கிக்கொண்டு வரலாம்.
வேலையாட்கள்:இதோ வந்தூட்டோம். (குதித்துக் கொண்டே) ஹே, ஹே, உச்சவம் நடக்கப்போவுது. வவுறு ரொம்பப்போவுது.
யை
விதூ: (எல்லோரையும் பார்த்து) தம்பி ! நீ குடை பிடி,நீ சாமரம் போடு, நீ மணியடி, நீ சாம்பிராணி தூபம் போடு, நீ மயில்விசிறி வீசு. நீங்கள் நான்கு பேரும் சாமி தூக்குங்கள். நீங்கள் திங்கள்நாலுபேரும் இந்தக் கடிதாசி யிலே நான் எழுதி யிருக்கும் பாட்டைப்பாடிக்கொண்டே 'முன்னே போகவேண்டும். (கடிதத்தைக் கொடுக்கிறான்.) நான் சாமியாருக்கு பூசை போடுகிறவன். நான் நைவேத்தி யம் பண்ணிக்கொண்டே வருகிறேன். ஜாக்கிரதை; நான்