பக்கம்:இந்திர மோகனா.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

77

சொன்னது தெரிஞ்சுதா ? அவரவர்கள் வேலையை நன்றாய்ச் செய்யுங்கள்.

வேலை:-அப்படியே செய்வோம். எங்களுக்குப் படிக் கக் கூடத்தெரியும்.

விதூ:- சரி, சந்தோஷம்; வாருங்கள்.

(எல்லோரும் போகத்திரைமாறுகிறது.)

விதூ:-எல்லாரும் சித்தமா யிருக்கிறீர்களா ? புறப் படலாம். (மேற் சொல்லியபடி சிங்காரித்த ஒரு பெட்டியைத் தூக்கிக்கொண்டு புறப்படுகிறார்கள்.) டேய்! நீங்களெல்லா ரும் நான் ஜே யென்று சொல்லும்போது நீங்களும் ஜே யென்று சொல்லவேணும். (தனக்குள்) நமது இளவரசியின் துயரம் என் தந்திரத்தினால் தீரு மென்று நம்பிச் செய்கி றேன். பிறகு ஈசன் விட்டவழி யாகிறது. (பிரகாசமாய்) டேய் ! சொல்லுங்கடா. மோஹனாங்கி தேவிக்கு ஜே.

வேலை:-ஜே, ஜே.

விதூ:- (மெள்ள) இப்படிச் சொல்லுங்கள். சித்ராங்கி

தேவிக்கு.

வேலை:- வாய்; வாய்; வாய்.

விதூ:- மரக்கட்டைக் காலுக்கு.

வேலை:- போய் ! போய் ! போய் !

விதூ:- சாணக்கிய ராஜனுக்கு.

வேலை: டூர் ! டூர் ! டூர் !

விதூ:-டேய்! நடவுங்கள். பூஜைக்கு நேரமாயிடுது. நீங்கெல்லாம் கைகோத்துகிணு பாடிண்டு போங்க (எல்லாரும். போகிறார்கள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/94&oldid=1559561" இலிருந்து மீள்விக்கப்பட்டது