78
இந்திர மோஹனா
(சேவை மெட்டு)
சித்தம் சிறுகாலே சாணக்யன் மரக்காலே சித்ரா தேவியின் புத்தியில்லா மருமகன் பித்தத்திற் கிருப்பிடமாம் பைத்யக்கார மாப்பிள்ளை சத்தத்திற்குக் கால்வைத்து சாய்ந்தாடச் சப்பாணி. ஸ்ரீராமசந்திரனே யென்ற மெட்டு)
விதூ
பார்வைக்கு வெகு அந்தம்
புத்தியோ அதிக மந்தம்
கண்டார் நகைக்கும் சந்தம்-பார். பார். பார். தேவி தெப்பல் அவர்க்கே சொந்தம்.
(தாதன் சொல்லும் மாதிரி)
வினாச காலம் க்ரகசார காலம்
தேவியர்குக் கேடுகாலம்
[ந்தா
என் கையிலிருக்கும் மரக்கட்டைக்காலா-கோவிந்தா கோவி பாழும் பணத்தாசை பார்க்காமல் செய்யும் மோசம் பின்னிட்டு வரும் நாசம் மரக்கட்டை கால்வைத்த பாசம் கோவிந்தா. கோவிந்தா.
டேய்! நமது கோயில் வந்துவிட்டது. இனி ஜெய் சொல்லுங்கள். மரக்கட்டை காலுக்கு (எல்லாரும் ஜெய் என்கிறார்கள்.) இளவரசி யம்மாவுக்கு (எல்லாரும் ஜெய் என் கிறார்கள்.)
(விதூஷகன் பெட்டியைத் திறந்து மரக்கட்டைக்காலை எடுத்து கோவிலில் வைக்கிறான். எல்லாரும்
கரகோஷம் செய்கிறார்கள்.)