இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இந்திர மோஹனா
79
வேலை :- (கோவிலுக்குள் உற்றுப் பார்த்து) அடெடே. வேடிக்கேக்கு மரக்கட்டை காலுன்னு சொன்னாரென்னுபாத் தோமே; நெசமாவே மரக்கட்டைகாலு. ஹி.ஹி.ஹி.
விதூ :-டேய்.
இது லேசானதல்ல. இந்த சாமிக்கு பூசை போட்டா யார் மேலான தெய்வம் வரும். என்னான்னு பாத்தே. எல்லாரும் குந்துங்க. ஏ வீடு பாத்தான்! பூஜை சாமான் எல்லாம் கொண்டா. (அவன் கொண்டுவைக்க: பூஜை ஆரம்பிக்கிறான்.)
அர்ச்சனை.
ஓம் அப்பளம் தருபுரும் உஷ்ணம் பசுவர்ணம் புரும் புரும்.
பக்ஷணம் வரணம் தாயே பூர்வ கர்வோப சாந்தயே.
ஓம்.
ஸ்ரீ மரக்கட்டைக்காலாய நம :
குரங்குவாலாய நம :
பெரியதலையாய நம :
நொண்டிக்காலாய நம :
சுண்டைக்காயாய நம :
இலுப்பைக்காயாய நம :
வெங்காயாய நம :
குடுகுடாய நம :
மூசுண்டாய நம :
அத்துப்போளியாய நம : அனுமந்தராயாய நம : குஞ்சாலாடாய நம :
கஞ்சா குடியாய நம :