பக்கம்:இந்திர மோகனா.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

இந்திர மோஹனா

ரவாலாடாய நம :

அஸ்காலாடாய நம

ஜிலேபிபர்பாய நம :

மைசூர்பாஹாய நம :

முறுக்குசீடாய நம :

கருக்குபொண்டாய நம : சோடாலிம்னேடாய நம: வாடாகம்னாடாய நம; மஸால்வடை முறுக்காய நம: வாயிலேபோட்டுநுறுக்காய நம: வெத்தலே பாக்குபீடியாய நம: வவுத்துலே வீக்கம்வாடியாய நம: அந்தாய நம: இந்தாய நம: ஆத்தங்கரைமணலாய நம:

அர்ச்சனை இதோடு முடிக்கிறே நம: ஓம்: ஸ்ரீமரக்கட்டைக்காலாய நம: ஓம்.

லாடு.

வேலை:- (கலகலவென்று சிரித்து) நேக்கு நேக்கு முறுக்கு. நேக்கு வடை (எல்லாரும் கூச்சலிடுகிறார் கள். விதூஷகன் மணியடித்து கற்பூரார்த்தி செய்கிறான்.) (இந்த ஆரவாரத்தைக் கேட்டு அரண்மனையிலுள்ள சிலர் என் னவென்று பார்க்கவந்தார்கள்.)

விதூ:- சாமி மரக்கட்டைக்காலே! கொஞ்சம் பொடி (பொடிப்பட்டையைக் காண்பிக்க, எல்லோரும்

போடுமே. நகைக்கிறார்கள்).

வந்தவர்கள்:- ஓய் விதூஷகரே ! என்ன இது அமர்க் களம் செய்கிறீர்.

விதூ :- உத்சவம் பண்ணுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/97&oldid=1559564" இலிருந்து மீள்விக்கப்பட்டது