பக்கம்:இந்திர மோகனா.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

81

வந்த:- என்ன உத்ஸவம் ஐயா இது? பெருமாள்கூட பொடிபோடுவாரா? பட்டையோடு காட்டுகிறீரே.

விதூ:- (சிரித்து) நன்றாய்ச் சொன்னீர்கள். பெருமாள் தான் அவசியம் பொடி போடவேண்டும். ஏனெனில் விஷ்ணு எப்பொழுதும் நடுக்கடலிலேயே இருக்கிறார். அவருக்கு ஜலுப்பு ஒயாமலிருக்கும். ஒழுக்கு மூக்காகவேயிருக்கும். சிவன் எப்போதும் கங்கையைத் தலைமேலே வைத்திருக்கிற படியால் அவருக்கும் மூக்கு ஜலதாரையாயொழுகும். இவர் கள் ஒரு சிடிகை பொடி போட்டால் ஜலுப்பெல்லாம் பறந் தோடிப்போம். (எல்லோரும் விலாப்புடைக்க நகைக்கிறார் கள்.)

வந்த:- ஓய், நன்றாய் சிரிப்பு மூட்டுகிறீர். வயிறு வெடித்துவிடும்போலிருக்கிறது. அதற்காகிலும் நீர் பெரு மாள் வைத்துப் பூஜை செய்யக்காணோமே. ஏதோ மரக் கட்டையை வைத்துக்கொண்டு அழுகிறீரே.

விதூ:-என்ன ஐயா ! இது? உங்களுக்கு ராமாயணம் தெரிந்தால் என்னை இப்படிக் கேட்கமாட்டீர்கள்.

வந்த:- என்ன? ராமாயணத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நீர் சொல்வது தெரியவில்லை.

விதூ:-ராமாயணத்தில் ராமர் காட்டுக்குப் போனதும் பரதர் என்ன செய்தார்? தெரியாதா?

வந்த:- என்ன செய்தார்? ராஜ்யம் வேண்டாமென்று சொல்லிவிட்டார்.

விதூ:-அவ்வளவுதானா! அப்புறம் ராமரிடம் போய் என்ன செய்தார் ?

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/98&oldid=1559565" இலிருந்து மீள்விக்கப்பட்டது